ரசம்

 

தேவை:

புளி_சிறிய கோலி குண்டு அளவு
மிளகு_1/4டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
தனியா_1/4 டீஸ்பூன்
பூண்டு_3 பற்கள்
தக்காளி_1
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_1/4டீஸ்பூன்
பருப்பு வேக வைத்த தண்ணீர்_1/2 கப்
கொத்துமல்லி இலை_1 கொத்து‌
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு_1/4 டீஸ்பூன்
உளுந்து_1/4 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
வெந்தயம்_சுமார் 5 எண்ணிக்கை
காய்ந்த மிளகாய்_2
கறிவேப்பிலை_1 கொத்து
பெருங்காயம்_சிறிது
எண்ணெய்__1/2 டீஸ்பூன்

செய்முறை:

புளியை 2 கப் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைக்கவும். மிளகு,சீரகம்,தனியா இவற்றை மிதமாக வறுத்து பூண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.புளி ஊறியதும் அதில் தக்காளி,கொத்துமல்லி இலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மிளகு சீரக பொடி இவற்றைப் போட்டுக் கரைத்து உப்பு சரிபார்த்து அடுப்பில் ஏற்றவும்.நுரைத்துக்கொண்டு ஒரு கொதி வந்ததும் பருப்புத் தண்ணீர்,எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். விருப்பமானால் சிறிது தேங்காய்ப்பூவும் சேர்த்து இறக்கலாம்.

இப்போது ஒரு வாண‌லியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை  தாளித்து ரசத்தில் கொட்டி மூடவும்.