முருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்

20150219_160734

சித்ரா வீட்ல கீரை வாரமோ !!

வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.

20150219_142217

ஃப்ரெஷ் கீரை

முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.

தேவையானவை :

20150222_144115

அளவெல்லாம் உங்கள் விருப்பம்தான்

முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)

வறுத்த‌ வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு

செய்முறை :

வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர‌ வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.

பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.

மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.

வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.

எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.

விருது பெற்ற மகிழ்ச்சியில் ….

ரஞ்சனியின் விருதிற்கு நன்றி

நாம் எத்தனைப் பெரியவர்களானாலும் நமக்கும் விருது, பரிசு கிடைக்கிறது எனும்போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அப்படித்தான் சமீபத்தில் இரண்டு ஜாம்பவான்களிடமிருந்து எனது இரண்டு வலைப்பூவுக்கும் விருதுகள் பெற்றது சந்தோஷமாக உள்ளது. இரண்டு பேருமே பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகத்தைக் கொடுப்பவர்கள். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!

விருது பெற்றதை முதலில் நம்ப முடியாமல்தான் திகைத்தேன். பிறகு “நமது வலைப்பூவிலும் ஏதோ ஒன்று இருக்கப்போய்தானே கொடுத்தார்கள்” என எனக்கு நானே சமாதானமானேன்.

1) ஒருவர் சொல்லுகிறேன் காமாக்ஷி அம்மா அவர்கள் ____ என்னுடைய சமையல் வலைப்பூவுக்காகக் கொடுத்தார்.

2) மற்றொருவர் அரட்டை இராஜலஷ்மி அவர்கள் _____ என்னுடைய பொழுதுபோக்கிற்காகக் கொடுத்தார்.

விருதுதான் கிடைத்துவிட்டதே, யாரையும் தொட விடாமல் அப்படியே அள்ளிக்கொண்டுபோய் வீட்ல பத்திரப்படுத்திக்கலாம் என விரைந்தால், விருதினை 5 நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லி நிபந்தனை விதித்துவிட்டனர்.

பல நட்புகள் இருக்கும்போது ஐவரை மட்டும் எப்படித் தெரிவு செய்வது என குழம்பி, எல்லா வலைப்பூவுக்கும் ஓடினேன். ஆனால் எல்லோரும் ஏற்கனவே, எனக்கு முன்னமே பெற்றுக்கொண்டுவிட்டனர் என்பதால், இவ்வலைபூவுக்கு வருகை தரும் வலையுலக நட்புகள் அனைவருக்கும் இவ்விருதினை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தளிக்கிறேன்.

மீண்டும் இருவருக்கும் நன்றி பல !!

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

2013 in review

இங்கு வருகை தரும் அனைத்து வலை உறவுகளுக்கும் நன்றியும், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும் !!  வருகின்ற 2014 ஆம் வருடம் எல்லோரது வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நல்ல சிந்தனையும் பெருக வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன், நன்றி !!

என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு, உற்சாகமூட்டும் காமாக்ஷிமா, இளைய சகோதரி மகி, தோழி ரஞ்ஜனி, சகோதரி ராஜலக்ஷ்மி, திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!

அவ்வபோது வந்து பின்னூடங்கள் கொடுத்து வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி பல !!

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 240,000 times in 2013. If it were an exhibit at the Louvre Museum, it would take about 10 days for that many people to see it.

Click here to see the complete report.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 18 Comments »

ப்ளாக் திறப்புவிழா அழைப்பிதழ்

 

மிகப் பிரம்மாண்டமான முறையில் 🙂 , மிகுந்த பொருட்செலவில் :D, சனிக்கிழமைய‌ன்று  (26_12‍‍_2013)

http://chitrasundars.blogspot.com/  திறக்க இருப்பதால் அனைவரும் வந்து கலந்துகொண்டு,விழாவினை சிறப்பிக்குமாறு

அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அன்புடன் சித்ராசுந்தர்.

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 18 Comments »

பொங்கல் வாழ்த்து

 

pongal vaazhthu

                 

          இனிய தமிழ்ப் புத்தாண்டு & பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 12 Comments »

இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

flower

வலையுலக உறவுகள் அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய‌ புது வருட வாழ்த்துக்கள்.

2012 க்கு பிரியாவிடை கொடுத்து,2013 ஐ இன்முகத்துடன் வரவேற்போம்.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

வேர்ட்பிரஸ்.கொம் இலிருந்து புதுவருட வாழ்த்துக்களுடன் இனிய செய்தி.2012 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

19,000 people fit into the new Barclays Center to see Jay-Z perform. This blog was viewed about 150,000 times in 2012. If it were a concert at the Barclays Center, it would take about 8 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 4 Comments »

தீபாவளி வாழ்த்து

வலையுலக நண்பர்கள்,வருகை புரிவோர் அனைவருக்கும் இனிய  

                                        தீபாவளி   நல்வாழ்த்துக்கள்.     

இந்த தீபாவளிக்கு செய்த அதிரசம்.படத்தைப் பெரியதாக்கிப் பார்த்தால்தான் அதிரசம் எவ்வளவு ஜூஸியாக இருக்குன்னு தெரியும்.

எங்கள் ஊர்பக்கம் அதிரசம் இல்லாமல் தீபாவளி கிடையாது.தினை அல்லது பச்சரிசியின் ஈர மாவுடன் வெல்லம் அல்லது சர்க்கரை பாகு சேர்த்து செய்வாங்க.மற்ற எல்லா இனிப்பை விடவும் இதற்குத்தான் மவுசு அதிகம்.

கேதாரகௌரி விரத நோன்பு அன்று அதிரசம் செய்வாங்க.சாமிக்குப் படைக்கும் அதிரசங்களை அழுத்திப் பிழியாமல் அப்படியே எடுத்து வைப்பாங்க.மற்றதை எண்ணெயிலிருந்து எடுத்ததும் ஒரு படியால் அழுத்திப் பிழிந்து எடுத்து வைப்பாங்க.

கீழே படத்திலிருப்பது அப்படி(யே) எடுத்து வைத்ததுதான்.

இதன் செய்முறை இங்கே உள்ளது.

மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிப்பு வகைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 16 Comments »

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

வலையுலகத் தோழிகள் அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்.எல்லா வளமும் பெற்றிட,மனதில் மகிழ்ச்சி தங்கிட  நந்தன வருடத்தை இன்முகத்துடன் வரவேற்போம்.

                                                                                                                                                                                                                                    அன்புடன் சித்ரா.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 8 Comments »

பொங்கல் வாழ்த்து

 


தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைக் கொண்டாடும்


அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »