இதன் நிறமும்,அழகும்! Flower vase போலவே இருக்கும் இதனை பழுக்கும் வரை இதன் அழகுக்காகவே சாப்பாட்டு மேசையின் நடுவில் வைத்திருப்பேன். வாங்கும்போது இருந்த பச்சை நிறம் இரண்டு அல்லது மூன்று நாட்களில், பழுத்ததும், நிறம் மாறி இன்னும் அழகாக,கூடவே வாசனையுடன் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
நன்றாகப் பழுத்ததும் மேலே பச்சை நிறத்தில் உள்ள பகுதியை கையால் திருகினால் வந்துவிடும்.பின் வட்டவட்டமாக நறுக்கி (அல்லது விருப்பமான வடிவத்தில் நறுக்கி) சுற்றிலும் உள்ள முள் போன்ற பகுதியையும் நறுக்கிவிட்டு,நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதியையும் நீக்கிவிடவும்.
பழத்தை அப்படியே சாப்பிட்டால் நமிக்கும்.எனவே சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது உப்பு சேர்த்து குலுக்கி ஒன்றிரண்டு நிமி கழித்து சாப்பிடவேண்டியதுதான்.