ஓட்ஸ் இட்லி

தேவையானப் பொருள்கள்:

ஓட்ஸ்_ஒரு கப்
இட்லி மாவு_ஒரு இட்லிக் கரண்டி
உப்பு_சிறிது

செய்முறை:

இதற்கு    rolled oats  தான் சிறந்தது.

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக்கொள்ளவும்.

ஓட்ஸ் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து,சிறிது உப்பும் போட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.

இட்லி மாவு இல்லையெனில் ஒரு 2 டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம்.

ஒரு 10 நிமிடம் கழித்துப் பார்த்தால் ஓட்ஸ் இட்லி மாவு கெட்டியாக ஆகிவிடும்.தேவையெனில் கொஞ்சம் நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக்  கரைத்துக்கொள்ளவும்.

மாவு புளிக்க வேண்டுமென்பதில்லை.ஒரு 1/2 மணி நேரத்திற்குள்ளேயே மாவு தயாராகிவிடும்.

இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி, பாத்திரம் சூடாகியதும்  அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும்.

சூடாக, விருப்பமான,காரமான‌ சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
அல்லது புளிக்குழம்பு,காரக்குழம்பு,கருவாட்டுக்குழம்பு,மீன்குழம்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் தொட்டு சாப்பிடலாம்.

ஓட்ஸ் தோசை வேண்டும் எனில் மாவில் மேலும் கொஞ்சம்  நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.