கரும்பு

நம் ஊரில் இருந்தவரை உழவர் சந்தை எந்தப்பக்கம் என்றுகூடத் தெரியாது.ஆனால்  USA  வந்த பிறகு, ஒவ்வொரு வாரமும் Farmer’s market   சென்று காய்கறிகள்,பழங்கள் வாங்கினால்தான் பிடிக்கிறது.வேறு வழியில்லை.

கடையில் வாங்கும்போது பல நாட்கள்  ice  ல் வைத்திருப்பதால் அதன் சுவையே மாறிவிடுகிறது.ஆனால் இங்கு அந்தந்த season க்கு ஏற்ற காய்கறிகள்,பழங்கள் புதிதாகக் கிடைப்பதால் அதன் சுவையே தனிதான்.

நான்   Farmer’s market     லிருந்து  வாங்கும் பொருள்களில் ஒன்றுதான் இந்தக் கரும்பும்.

ஒவ்வொரு வாரமும் இரண்டு துண்டுகள் கரும்பு வாங்கிவிடுவேன்.

முன்பெல்லாம் ஒரு முழு கரும்பு $ 5 க்கு கிடைக்கும்.இப்பொழுது துண்டுகள் போட்டு விட்டார்கள்.ஒரு துண்டு $ 2.

வீட்டிற்கு வந்ததும் ஒரு கல்லால் ஒவ்வொரு கணுவிலும் இரண்டு அல்லது மூன்று தட்டு தட்டினால் தனித்தனி புல்லாக உடைந்துவிடும்.

பிறகு கத்தியால் மேல்பட்டையை சீவிவிட்டால் கரும்பு சாப்பிடத் தயார்.

குறிப்பு:

சுபா! நீ எங்கள் வீட்டிற்கு வந்தாலும்  உனக்கும் இப்படித்தான் செய்து தருவேன்.

இனிப்பு வகைகள், கிராமத்து உணவு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »