கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்

தேவையானப் பொருள்கள்:

வெள்ளைக் கொண்டைக்கடலை_1/2 கப்
புரோக்கலி_1
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கடலையை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.அடுத்த நாள்  கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும்.

புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து கடலையை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.

கடலையுடன் மசாலா நன்றாகக் கலந்த பிறகு புரோக்கலியை சேர்த்துக் கிளறிவிடவும்.புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.

கடலையும்,புரோக்கலியும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாத‌த்திற்கும்,சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட‌ நன்றாக இருக்கும்.