கோஸ் பொரியல்_மற்றொரு முறை

 

தேவையானவை:

கோஸ் நறுக்கியது_ஒரு கிண்ணம்
பச்சை மிளகாய்_1
தேங்காய்ப் பூ_ஒன்றிரண்டு டீஸ்பூன்கள்
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கோஸிலிருந்து முழு இலைகளாகப் பிரித்தெடுத்துக் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு, இலைகளின் நடுவிலுள்ள தண்டை நீக்கிவிட்டு, இலைகளை மட்டும் நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கவும்.

காரம் விரும்பினால் பச்சை மிளகாயைப் பொடியாகவும்,இல்லையென்றால் லேசாகக் கீறியும் வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு,மிளகாயைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,கோஸை சேர்த்துக் கிளறி,சிறிது உப்பு தூவி மூடி போடாமல் வேக விடவும்.மூடினால் நிறம் மாற வாய்ப்புண்டு.

கோஸ் சீக்கிரமே வெந்துவிடும்.வெந்தபிறகு தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 6 Comments »

கோஸ் கூட்டு

தேவையானவை:

கோஸ்_1/4 கிலோ
பாசிப்பருப்பு_ அரைக் கைப்பிடி
மஞ்சள் தூள்_ஒரு துளி
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

அரைக்க:

தேங்காய்_ஒரு கீற்று
சீரகம்_1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்_2
தாளிக்க:

எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து,ஆறியதும் கழுவி விட்டு பருப்பு வேகுமளவு தண்ணீர் விட்டு துளி மஞ்சள் பொடி சேர்த்து மலர வேக வைக்கவும்.இதற்கிடையே கோஸைக் கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

பருப்பு நன்றாக வெந்ததும் கோஸைப் போட்டுக் கிளறி விட்டு வேக வைக்கவும்.இப்பொழுது அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய்,சீரகம்,பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்னீர் விட்டு அரைத்து எடுக்கவும்.கோஸ் நன்றாக வெந்த பிறகு அரைத்த கலவையை ஊற்றிக் கலக்கி விடவும்.சிறிது கொதித்ததும்  உப்பு போட்டுக் கிளறி இறக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி,கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம்.இது எல்லா வகையான சாதத்திற்கும்,சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும்.

கூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

கோஸ் பொரியல்

தேவையானவை;
கோஸ்- 1 கப்
சின்ன வெங்காயம்_2
வேக வைய்த்து பிழிந்த துவரம் பருப்பு(அ)பாசிப் பருப்பு_ 1 ஸ்பூன்
தேங்காய் துருவல்_ 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்_ 1/2 சிட்டிகை
கொத்துமல்லி தழை_ 1 கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_ 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_1/2 ஈர்க்கு

செய்முறை:
கோஸ்,வெங்காயம் இரண்டையும் பொடியாக அரிந்து வைக்கவும்.பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப் பருப்பு,பெருங்காயம்,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,பிறகு சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,அடுத்து கோஸ்,மஞ்சள் தூள்,உப்பு போட்டு வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்.மூடவும் வேண்டாம்.மிதமான தீயில் வேக வைக்கவும்.இடை இடையே கிளறி விடவும்.பிறகு வெந்த பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியில் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »