சிக்கன் நகெட்ஸ் (Chicken nuggets)

தேவையானவை:

Boneless,skinless chicken breast  _1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
மைதா_2 டீஸ்பூன்
முட்டை_1
ப்ரெட் க்ரம்ஸ் (bread crumbs)_2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்துவிட்டு மிகவும் மெல்லியத் துண்டுகளாகப் போடவும்.

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம்.சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வெந்துவிடும்.

அடிப்பிடிக்காமல் சிக்கன் துண்டுகளை இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிவிட்டு வேக வைக்கவும்.

தண்ணீர் முழுவதும் சுண்டி,சிக்கன் வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

மைதா,ப்ரெட் தூள் இரண்டையும் தனித்தனி கிண்ணங்களில் எடுத்துக்கொள்ளவும்.

முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு சிக்கன் துண்டை எடுத்து மைதாவில் முழுவதும் புரட்டி,அடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து,உடனே ப்ரெட் தூளில் போட்டு புரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

இதுபோல் எல்லா சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ அல்லது எண்ணெய் கொண்டமட்டுமோ போட்டு ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்துவிடவும்.

இதனை   ketchup உடனோ அல்லது  Ranch உடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.