பலாப்பழம்

 

Summer  வந்ததுமே பலாப்பழமும் வந்துவிடும்.ஆனால் என்ன பழத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே வாங்கிவருவோம்.விலைதான் கொஞ்சம் (உண்மையில் எக்கச்சக்கம்) கூடுதல்.

 

 ஊரில் என்றால் ஆளாளுக்கு கையிலும்,கத்தியிலும் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு அறுவை சிகிச்சையே நடந்தது போல் இருக்கும்.

இங்கு அப்படியொன்றும் பிசுபிசுப்பு இல்லை.எனவே எண்ணெய் பயன்படுத்தாமலேயே அரிந்துவிட்டேன்.

 

மேலேயுள்ள தண்டுப்பகுதியை கத்தியால் நறுக்கிவிட்டு லேசாக அங்கங்கே  கீறினால் படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.

இப்போது எளிதாக சுளைகளை எடுத்துவிடலாம்.

 

 

சுளையின் ஒரு பகுதியில் கத்தியால் லேசாகக் கீறினால் பலாக்கொட்டை வெளியே வந்துவிடும்.

பிறகென்ன பௌளில் இருப்பதை எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

 

 

பலாக்கொட்டைகளை சாம்பார்,கருவாட்டுக்குழம்பு போன்றவற்றிலும், பொரியலாகவும் செய்து சாப்பிடுவார்கள்.

 

பழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »