ஆரஞ்சுப் பழம் & ஆரஞ்சு ஜூஸ்

juice

இந்த சீஸனில் மார்க்கெட்டில் ஆரஞ்சுப் பழங்கள் நிறைய வெரைட்டியில் அதிக அளவில் வருகின்றன.அவற்றை எவ்வாறு எளிதாக உரிப்பது, துண்டுகள் போடுவது எனப் பார்க்கலாம்.

கீழே படத்திலுள்ளவை நம்ம ஊர் கமலா பழம் போன்றது.இதை உரிப்பது எளிது.தோலை நீக்கிவிட்டு சுளைகளை எடுத்து அந்தத் தோலின் மேலேயே வைத்து,தட்டில் அடுக்கி வைத்துக் கொடுக்கலாம்.

orange orange

கீழேயுள்ளது Navel ஆரஞ்சு.இதை ஜூஸ் பிழிந்தோ அல்லது உரித்து சுளைகளாகவோ சாப்பிடலாம்.

orange orange

சாத்துகுடி,ஆரஞ்சு போன்றவற்றை சிலர் நகத்தால் கீறி எடுக்க முயற்சிப்போம்.அப்போது நகக்கண்ணில் வரும் வலியானது மீண்டும் உரிக்க நினைக்கும்போதே ஒரு பயம் வரும்.அந்த வலியானது இரண்டுமூன்று நாட்கள் நீடிக்கும்.

அவ்வாறு இல்லாமல் முழு பழத்தின் மேலும் கீழும் கத்தியைப் பயன்படுத்தி சிறிது நறுக்கிவிட்டு,நான்கைந்து இடங்களில் நீளவாக்கில்  கீறிவிட்டுப் பிய்த்தால் தோல் எளிதாக வந்துவிடும்.

    orangeorange

உரித்த முழு பழத்தினை குறுக்காக,இரண்டாக நறுக்கி,பிறகு விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு,அந்தத் தோலின் மேலேயே நறுக்கிய துண்டுகளை வைத்து,ஒரு ‘டூத்பிக்’குடன் தட்டில் அடுக்கிக் கொடுத்தால் பார்க்க அழகாகவும் இருக்கும், பார்க்கும்போதே சாப்பிடவும் தூண்டும்.

அல்லது நறுக்குவதற்கு பதிலாக தோலை நீக்கிவிட்டு சுளைகளை எடுத்து அந்தத் தோலின் மேலேயே வைத்து,தட்டில் அடுக்கி வைத்தும் கொடுக்கலாம்.

orange  orange

ஜூஸ் வேண்டுமானால் இரண்டு பழங்களைக் குறுக்காக வெட்டி, ஒவ்வொன்றாக ஜூஸரில் வைத்துப் பிழிந்து ஒரு க்ளாஸில் ஊற்றிக் குடிக்கலாம்

orange   juice

பழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 11 Comments »

அன்னாசி பழம்

இதன் நிறமும்,அழகும்!  Flower vase  போலவே இருக்கும் இதனை பழுக்கும் வரை இதன் அழகுக்காகவே  சாப்பாட்டு மேசையின் நடுவில் வைத்திருப்பேன். வாங்கும்போது இருந்த‌ பச்சை நிறம் இரண்டு அல்லது மூன்று நாட்களில், பழுத்ததும், நிறம் மாறி இன்னும் அழகாக,கூடவே வாசனையுடன் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

நன்றாகப் பழுத்ததும் மேலே பச்சை நிறத்தில் உள்ள பகுதியை கையால் திருகினால் வந்துவிடும்.பின் வட்டவட்டமாக நறுக்கி (அல்லது விருப்பமான வடிவத்தில் நறுக்கி) சுற்றிலும் உள்ள முள் போன்ற பகுதியையும் நறுக்கிவிட்டு,நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதியையும் நீக்கிவிடவும்.

பழத்தை அப்படியே சாப்பிட்டால் நமிக்கும்.எனவே சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது உப்பு சேர்த்து குலுக்கி ஒன்றிரண்டு நிமி கழித்து சாப்பிடவேண்டியதுதான்.