ஸ்டஃப்டு சில்லீஸ்/Stuffed chillies

கேப்ஸிகம் என்றாலே வீட்டில் யாருக்கும் பிடிப்பதில்லை.அதிலும் ஸ்டஃப்டு கேப்ஸிகம் என்றால் அவ்வளவுதான். அதனால் கேப்ஸிகத்திற்கு பதில் படத்திலுள்ள குட்டிகுட்டி மிளகாய்களைப் பயன்படுத்தி,பிடித்தமான ஃபில்லிங் வைத்து இந்த ஸ்டஃப்டு சில்லீஸ் செய்தேன்.பார்க்க அழகாகவும், சாப்பிட நன்றாகவும் இருந்தது..

      

சிக்கன்,உருளை வறுவல் செய்த அன்று இந்த ஸ்டஃப்டு சில்லீஸ் செய்தேன். சுவையாக இருந்தது.அல்லது உங்களுக்குப் பிடித்தமான மசாலாவை வைத்தும் செய்துகொள்ளலாம்.

மிளகாயைக் கழுவி சுத்தம் செய்து,முழுவதுமாக இரண்டாகக்கீறி, விதைப்பகுதியை நீக்கிவிட்டு,அதில் மசாலாவை வைத்து,அதன் மேலே ஒரு சொட்டு ஆலிவ் ஆயில் தொட்டு வைத்து,ஓவன் சேஃப் பேனில் அலுமினம் ஃபாயிலைப் போட்டு அதில் மிளகாயை அடுக்கிவைத்து,350 டிகிரியில் ஒரு 10 நிமி பேக் செய்யவும்.

மசாலா காய்ந்தது மாதிரி இல்லாமல் இருக்கத்தான் எண்ணெய் வைப்பது.10 நிமிடங்களில் அருமையான ஸ்டஃப்டு சில்லீஸ் தயார்.சிறிது ஆறியதும் அப்படியே அல்லது டொமடோ கெட்சப்புடன் சாப்பிடலாம்.

அல்லது உங்கள் விருப்பம்போல் முழு மிளகாயின் ஒரு பக்கத்தில் நீளவாக்கில் கீறி அதனுள்ளே மசாலாவை வைத்து பேக் செய்தாலும் நன்றாக இருக்கும்.

அசைவம், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 6 Comments »