ப்ரெட் சாண்விச்சை பல வகைகளில் தயார் செய்யலாம்.
ப்ரெட்டின் இடையில் வைக்கப்போகும் பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்துகொள்ளலாம். சாதாரணமாக நான் செய்வதை இங்கே கொடுத்திருக்கிறேன்.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
தேவையானவை:
ப்ரெட் துண்டுகள் _ ஒரு நபருக்கு 2 துண்டுகள் வீதம்
வெங்காயம் _ (பெரிய வெங்காயம் இல்லை என்பதால் சின்ன வெங்காயம் சேர்த்திருக்கிறேன்)
தக்காளி
வெள்ளரி பிஞ்சு
விருப்பமான சீஸ்
விருப்பமான ரான்ச்/Ranch_கொஞ்சம்
லெட்யூஸ்/Lettuce_கொஞ்சம்
செய்முறை:
வெங்காயம்,தக்காளி,வெள்ளரிப் பிஞ்சு இவற்றைக் கழுவித் துடைத்துவிட்டு, விருப்பமான அளவில் மெல்லிய வில்லைகளாக்கவும்.
லெட்யூஸ் இலைகளையும் நீரில் அலசிவிட்டு,ஈரம்போகத் துடைத்துவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
இரண்டு ப்ரெட் துண்டுகளை டோஸ்ட்/toast செய்து எடுத்துக்கொள்ளவும்.அல்லது அப்படியேகூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடையில் ப்ரெட் துண்டுகளின் அளவுக்கே ( Singles ) சீஸ் கிடைக்கிறது.அதில் ஒன்றை எடுத்து ஒரு ப்ரெட்டின்மேல் வைக்கவும்.சீஸ் விருப்பமில்லை எனில் விட்டுவிடலாம்.
படத்திலுள்ள சீஸ் சிறிய அளவிலானது.நான் அவற்றை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி வைத்திருக்கிறேன்.
லெட்யூஸை ப்ரெட்டின் மேல் வைக்கவும்.
அடுத்து தக்காளி ஸ்லைஸை வைக்கவும்.
அதேபோல் வெங்காய ஸ்லைஸையும் வைக்கவும்.
அடுத்து வெள்ளரி பிஞ்சு ஸ்லைஸை வைத்து,
இறுதியாக ரான்ச்சையும் சிறிது ஊற்றி,
ப்ரெட் துண்டுகளை ஒன்றன்மேல் ஒன்று வைத்து லேஸாக அழுத்தவும்.இப்போது சுவையான,சத்தான,ஃப்ரெஷ்ஷான வெஜ் சாண்ட்விச் சாப்பிடத் தயார்.
அப்படியே சாப்பிட்டால் உள்ளே உள்ளவை மேலேயும்,கீழேயும் வெளியில் வர வாய்ப்புள்ளது.எனவே ஒரு பேப்பர் டவலால் சுருட்டி வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.