சூரியனைத்தேடி…ஒரு ( உற்சாக‌ நடை) பயணம் !!!

IMG_3611 IMG_3612

வேறு எதற்கு?குளிரை விரட்டவும்,விட்டமின்_D க்காகவும்தான்!

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »

மரங்கள்

 

பொதுவாக செடியில் முதலில் துளிரும் தொடர்ந்து பூ,காய்,கனி எனவும்தான் பார்த்திருப்போம்.ஆனால் இங்கு வந்தபிறகு எல்லாமே தலைகீழாக இருந்தது. முதலில் பூ,அடுத்து துளிரும்,இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மாறி அதுவே ஒரு அழகாகவும் இருந்தது.

எங்கள் வீட்டின் எதிரிலுள்ள மரம்.ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு  மாறுவதைப்  படம்பிடித்து வைத்திருந்தேன். ப்ளாக்  இருப்பதால் இதில் போட்டுவிட்டேன்.

 வசந்தம். (கொஞ்ச நாட்களுக்கு முன் பூக்கள் பூக்க ஆரம்பித்தது.படத்தைக் கிளிக் செய்து பார்த்தால் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது தெரியும்.)

பூக்கள் பூத்துவிட்டன.  ( தற்சமயம் )

கோடை  (இன்னும் கொஞ்ச நாளில்)

இலையுதிர் காலம். ( கோடை முடிந்த பிறகு,ஒரு காற்று அடித்தால் போதும்.இலைகள் உதிரத் தயாராகவுள்ளன.)

குளிர் காலம் ( இலைகள் உதிர்ந்து,மரம் காய்ந்துவிட்டதுபோல், பார்க்கவே பரிதாபமாக‌)

 

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 4 Comments »