முருங்கைக்காய்ப் பொரியல்

 

 

 

 

 

 

 

 

 

 

தேவையானவை:

முருங்கைக்காய்_2
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முருங்கைக்காயை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி தளிக்க வேண்டியப் பொருள்களைத் தாளித்துவிட்டு முருங்கைக்காயைப் போட்டுக் கிளறவும்.

அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு காய் பாதி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி,மிதமானத் தீயில் வேக விடவும்.

காய் வெந்து வருவதற்குள் இடையிடையேக் கிளறி விடவும்.காய் சீக்கிரமே வெந்துவிடும்.

காய் வெந்து,மஸாலா எல்லாம் ஒன்றாகக் கலந்து, தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.

எல்லா சாத வகைகளுக்கும்,முக்கியமாக ரசம்,கிள்ளிப்போட்ட சாம்பார் போன்ற‌வற்றிற்கு நன்றாக இருக்கும்.

விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக்கொள்ளலாம்.