பீன்ஸ் பொரியல் (மற்றொரு வகை)

 

தேவையானவை:

பீன்ஸ்_ஒரு கிண்ணம்
பச்சைப் பருப்பு_ஒரு கைப்பிடி
வெந்த துவரம்பருப்பு_1/2 கைப்பிடி
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப்பருப்பை வெறும் வாணலில் போட்டு விவக்க வறுத்து,ஆறியதும் கழுவிவிட்டு, ஒரு கடாயில் எடுத்துக்கொண்டு,அது வேகும் அளவை விட சிறிது கூடுதலாகத் தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து  அடுப்பில் ஏற்றவும்.

பீன்ஸை விருப்பமான அளவில் நறுக்கவும்.

பருப்பு பாதி வெந்த நிலையில் நறுக்கி வைத்துள்ள பீன்ஸை அதனுடன் சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.

காய் வெந்துகொண்டிருக்கும்போதே மிளகாய்த்தூளை சேர்த்துக் கிளறி விடவும்.

காய் வெந்து,நீர் வற்றியதும் வெந்த துவரம்பருப்பு சேர்த்துக் கிளறவும்.

ஒரு கரண்டியில் எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்து பொரியலில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

விருப்பமானால் இறக்கும்போது தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கலாம்.

இப்போது சுவையான பீன்ஸ் பொரியல் தயார்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 6 Comments »

பீன்ஸ் பொரியல்

 

தேவையான பொருள்கள்:
பீன்ஸ்(நறுக்கியது)_ 1 கப்
சின்ன வெங்காயம்_2
மிளகாய் தூள்_ 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4டீஸ்பூன்
பாதி வெந்த துவரம் பருப்பு_ 1/2 கைப்பிடி
தேங்காய் பூ_ 1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
கடுகு_1/4 டீஸ்பூன்
உளுந்து_1/4 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_சிறிது
எண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

முதலில் பீன்ஸை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.சின்ன வெங்காயத்தை அரிந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப் பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து,பிறகு சின்ன வெங்காயம் வதக்கி அடுத்து பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி காய் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போடாமல் வேகவிடவும். மூடி போட்டல் பச்சை நிறம் மாறிவிடும்.

நன்றாக வெந்த பிறகு துவரம் பருப்பைப் போட்டு பிரட்டவும்.தண்ணீர் சுண்டியதும் தேங்காய் பூ,கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »