டார்டியா சிப்ஸ் / Tortilla chips

நான் எப்போதாவது flour tortillas/ ஃப்ளோர் டார்டியாஸ் வாங்குவேன்.இது சாஃப்ட் சப்பாத்தி மாதிரி இருக்கும்.லத்தீன் அமெரிக்கன் ப்ரெட்.அவர்கள் இதை வைத்து பலவிதமான உணவுகளைத் தயார் செய்வர்.அதில் ஒன்றுதான் இந்த சிப்ஸ். இங்கு L ஐ சைலண்டாக உச்சரிக்க வெண்டும்  என்பதால் tohr/tee/yahs  என்றே சொல்ல‌ வேண்டும்.ஒருமையில் Tortilla, பன்மையில் Tortillas.

இதை வீட்டில் யாருக்கும் பிடிக்காது.போட்டி போட்டு சாப்பிட ஆள் இருந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து காலி செய்யலாம்.அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதால் குறைந்த எண்ணிக்கை உள்ள பாக்கெட்டாக வாங்கி (நான் மட்டும்) சாப்பிட்டது போக மீதியை Bake/பேக் செய்து சிப்ஸாக்கிடுவேன்.மகளும் நானும் விரும்பி சாப்பிடுவோம்.தொட்டு சாப்பிட சல்ஸா இருந்தால் நன்றாக இருக்கும்.

நீண்ட நாட்களாக சிப்ஸ் பக்கமே போவதில்லை என்பதால் சல்ஸாவும் கைவசமில்லை.அதனால் எளிதாக செய்யக்கூடிய குவாக்கமோலி/அவகாடோ டிப்  செய்தேன்.இந்தப் பதிவில் டார்டியா சிப்ஸ் செய்வதைப் பற்றி மட்டும் பார்த்துவிட்டு அடுத்த பதிவில் டிப் செய்வதைப்பற்றி பார்க்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

ஃப்ளோர் டார்டியாஸ்_3 அல்லது உங்கள் விருப்பம்போல்
பட்டர்/Butter_சிறிது
மிளகுத்தூள்_சிறிது
உப்புத்தூள்_சிறிது

செய்முறை:

ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

flour tortillas

தேவையான டார்டியாஸை எடுத்து  அதன் மேல் முழுவதும் படுமாறு பட்டரை தேய்த்து விடவும்.பின் அவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி,

flour tortillas

மேலே படத்திலுள்ளதுபோல் ஒரு கத்தியால் முதலில் அரை வட்டம்,அடுத்து கால் வட்டம் இப்படியாக சிறுசிறு முக்கோணங்களாக‌ வருவதுபோல் வெட்டிக்கொள்ளவும்.

flour tortillas

ஒரு cookie sheet /குக்கி ஷீட்டை எடுத்து அதில் அலுமினம் ஃபாயில் போட்டு அதன்மீது நறுக்கி வைத்துள்ள டார்டியாஸ் துண்டுகளை அடுக்கிவைத்து அவற்றின் மேல் மிளகுத்தூள் & உப்புத்தூளை லேஸாகத் தூவி விடவும்.

வெட்டிய துண்டுகள் மீதமிருக்குமானால் அதன் மேலேயே இன்னொரு அடுக்காகவும் வைத்து அதன்மீதும் மிளகுத்தூள் & உப்புத்தூளை மீண்டும் தூவவும்.

tortillas chips

அந்த ட்ரேயை முற்சூடு செய்யப்பட்டுள்ள அவனில் சுமார் 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு அல்லது லேஸாக ப்ரௌன் நிறம் வரும்வரை bake/பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.

இப்போது கரகரப்பான,மொறுமொறுப்பான டார்டியா சிப்ஸ் தயார்.இதனை ‘சல்ஸா’வுடனோ அல்லது ‘அவகாடோ டிப்’புடனோ சாப்பிட சூப்பராக இருக்கும்.

tortillas chips&guacamole

அடுத்த பதிவில் அவகாடோ டிப் செய்முறையைப் பார்க்கலாம்.

Advertisements

பேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ்/Baked potato chips

  

 தேவையானவை:

உருளைக்கிழங்கு_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
ஆலிவ் ஆயில்_ஒரு டீஸ்பூன்
உப்பு_சிறிது

செய்முறை:

உருளையை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு சிப்ஸ் கட்டையில் வைத்து வில்லைகள் போடவும்.இதற்கு கத்தியைக்கூடப் பயன்படுத்தலாம்.ஆனால் வில்லைகள் ஒரே அளவாக வருமாறு பார்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் ஒவ்வொன்றின் வேகும் நேரமும் வேறுபடும்.

ஒரு தட்டில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலந்துகொண்டு,அதில் உருளை வில்லைகளைப்போட்டுப் புரட்டி,மிளகாய்த்தூள் எல்லா பகுதிகளிலும் சீராகப் படுமாறு செய்யவும்.

இவ்வாறு செய்த பிறகு எண்ணெயை வில்லகளின்மேல் பரவலாக ஊற்றிக் கிளறி ஒரு பௌளில் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் ஒரு 1/2 மணி நேரம் வைக்கவும்.

அவனை 350 டிகிரிக்கு சூடுபடுத்தவும்.பேக்கிங் ட்ரேயில் அலுமினம் ஃபாயிலைப்போட்டு ஒவ்வொரு வில்லையாக அடுக்கி அவனில் வைத்து பேக் செய்யவும்.

ஒரு 10 நிமி கழித்த பிறகு வெளியே எடுத்து வில்லைகளைத் திருப்பிவைக்கவும். இவ்வாறே அடுத்தடுத்து 8 லிருந்து 10 நிமிடத்திற்கு இரண்டுமூன்று தடவைத் திருப்பிவிடவும்.

அடுத்து நான்கைந்து நிமிடங்களுக்கு இரண்டுமூன்று தடவை அல்லது தேவைப்படும் நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்.

கடைசியில் கொஞ்சம் கவனமாக‌ இருக்க வேண்டும்.இல்லையென்றால் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.

ஒவ்வொரு முறை ட்ரேயை வெளியில் எடுக்கும்போதும் சிவந்து, வெந்திருக்கும் ஒருசிலவற்றை எடுத்துவிடவும்.

கடைசியில் எல்லா சிப்ஸும் சிவந்த பிறகு ட்ரேயை வெளியில் வைத்து ஆறவிடவும்.

கொஞ்சம் இருக்கட்டுமே என்று ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகு அவனிலேயே விட வேண்டாம்.கருகிவிடும்.

இப்போது சுவையான,கரகரப்பான பேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.நன்றாக ஆறிய பிறகு எடுத்து சாப்பிடவும்.