தேவையானப் பொருள்கள்:
வேர்க்கடலை_1/2 கப்
தேங்காய் பத்தை_5
பச்சை மிளகாய்/காய்ந்த மிளகாய்_3
இஞ்சி_ஒரு சிறு துண்டு
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் தேங்காயின் brown பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு pulse ல் இரண்டு சுற்று சுற்றினால் பூ மாதிரி ஆகிவிடும்.அதனுடன் பச்சை மிளகாய்,இஞ்சி,வேர்க்கடலை,உப்பு சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.நன்றாக மசிந்ததும் ஒரு கிண்ணத்தில் வழித்தெடுத்து,தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துக் கொட்டிக் கலக்கி வைக்கவும்.
இது இட்லி,தோசை முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.
இதையே கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து துவையலாகவும் பான்படுத்தலாம்.
பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாய் வைத்தும் அரைக்கலாம்.இதற்கு தேங்காய்,பொட்டுக்கடலை சட்னிக்கு வைப்பதைவிட ஒரு மிளகாய் அதிகமாக வைத்தால்தான் காரம் சரியாக இருக்கும்.