சுட்ட சோளக்கதிர்/Baked corn on the cob (தொடர்ச்சி)

சோளக்கதிர்களை வாங்கி அதன் மேலுள்ள இலை/தோகை,நார்களை நீக்கிவிட்டு நீரில் அலசித் துடைத்துவிட்டு லேசாக உப்பு தூவி ஒரு aluminum foil லால் முழுவதும் சுற்றி oven safe pan ல் வைத்து 350 டிகிரியில் 3/4 மணி நேரத்திற்கு bake செய்யவும். இடையில் 1/2 மணி நேரம் கழித்து  கதிர்களை ஒருமுறைத் திருப்பிவிட‌வும்.

பிறகு வெளியே எடுத்து ஆறியதும்  சாப்பிட வேண்டியதுதான்.

சோளக்கதிர் வேகவைத்தல்:

சோளக்கதிர்களைத் தோகையுடனோ அல்லது அதன் மேலுள்ள இலை/தோகை, நார்களை நீக்கிவிட்டு,கதிர்களை பாத்திரத்தில் வைத்து அது மூழ்குமளாவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பிறகு 10 லிருந்து 20 நிமிடத்திற்குள் வெந்துவிடும்.பிறகு வெளியே எடுத்து ஆறியதும்  சாப்பிட வேண்டியதுதான்.

கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 2 Comments »

சுட்ட சோளக்கதிர்/Baked corn on the cob

சில வகை தானியக்கதிர்கள்,கிழங்குகளை அவித்து,வேக வைத்து சாப்பிடுவதைவிட சுட்டு சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.உப்பு போன்ற எதையுமே சேர்க்கத் தேவையில்லை.ஆனாலும் சுவை அதிகமாக இருக்கும்.

இங்கு சில வகையான‌ சோளக்கதிர்கள் கிடைக்கின்றன.நான் வாங்குவது மஞ்சள் நிற‌ சோளம்தான்.சாதாரண சுவையில் இருக்கும்.இது கிடைக்காத பட்சத்தில் வெள்ளை சோளம்.இது கொஞ்சம் இனிப்பாக,சாஃப்டாக இருக்கும்.

மார்க்கெட்டிலிருந்து சோளக்கதிர்கள் வாங்கியாச்சு.நுனிப்பகுதியை மட்டும் நறுக்கிவிட்டு oven safe pan ல் வைத்து 350 டிகிரியில் சுமார் 3/4 மணி நேரத்திற்கு bake செய்யவும்.இடையில் சுமார் 1/2 மணி நேரம் கழித்து  கதிர்களை ஒருமுறைத்  திருப்பிவிட‌வும்.

இப்போது சோளம் நன்றாக வெந்து,தோகையின் பச்சை நிறம் மாறி ப்ரௌன் நிறத்தில் இருக்கும்.வெளியே எடுத்து ஆற வைக்கவும்.

பிறகென்ன!கதிரின் மேலுள்ள இலை/தோகையை,நார்களை நீக்கிவிட்டுச் சாப்பிட வேண்டியதுதான்.ஒவ்வொரு முத்தாக எடுத்து சாப்பிடுவதைவிட அப்படியே கடித்து சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.

சோளக்கதிரை இதேபோல்,கொஞ்சம் வித்தியாசமாக,வேறொரு முறையில் சுடுவதை நாளை பார்க்கலாம்.