நாங்க இருக்கும் பகுதியிலுள்ள ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கிய சில பழங்கள்.ஃப்ரெஷ்ஷாக இருப்பதால் ஒரிஜினல் டேஸ்ட்டில் இருக்கும்.பொங்கல்சமயம் என்பதால் பழங்களுடன் கரும்பும் சேர்ந்துகொண்டது.
இந்தப் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு.முழு கரும்பு கிடைத்தாலும் அப்படியே எடுத்துவர முடியாது என்பதால் துண்டுகளாகவே வாங்கியாச்சு.
எல்லோரும் ஒவ்வொன்னா எடுத்துக்கோங்க.உங்களுக்காகவே பட்டையை உரித்து,குட்டிக்குட்டித் துண்டுகள் போட்டாச்சு.
செர்ரி பழங்கள்
நிறைய வெரைட்டியில் திராட்சை கிடைக்கும்.
பள்ளி முடிந்து வரும் மகளுக்காகக் காத்திருக்கும் பலா சுளைகள்.
எப்போதும் (சீஸன் சமயத்தில்) பெரிய கொய்யாப் பழங்களே வரும். ஒருமுறை இதுபோன்ற நாட்டுக்கொய்யா கிடைத்தது.உள்ளே லேஸான பிங்க் நிறம்.நல்ல இனிப்பு.