காளான் பொரியல் / Mushroom poriyal

kaalaan

இங்கு நிறைய வகைகளில், வடிவங்களில் காளான்கள் கிடைக்கின்றன. எப்போதும் வெள்ளை நிற காளான்கள்தான் வாங்குவேன்.இந்தமுறை படத்திலுள்ள இந்தக் காளானை ( Crimini mushrooms) வாங்கினேன்.

இதுவும் நல்ல சுவையில் இருந்தது.அதனால் அடுத்த முறை துணிந்து வேறொரு காளான் வாங்கும் ஐடியா உள்ளது,பார்க்கலாம்!!

kaalaankaalaan

தேவையானவை:

சிறிய காளான் _ சுமார் 15 எண்ணிக்கையில்
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
இஞ்சி _ சிறு துண்டு
பூண்டிதழ் _ 1
மிளகாய்த்தூள் _ ஒன்றரை டீஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப‌
மஞ்சள்தூள் _ சிறிது
உப்பு _ தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம் (விருப்பமானால்)
கறிவேப்பிலை

செய்முறை:

காளானை கழுவிவிட்டு நன்றாகத் துடைத்துவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.இஞ்சி பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி என்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், இஞ்சிபூண்டு, தக்காளி,காளான் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கிண்டி மூடி வேக வைக்கவும்.

மசாலா எல்லாம் நன்றாகக் கலந்து,காளான் வெந்து வரும்வரை இடையிடையே விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான காளான் பொரியல் தயார்.இது எல்லா வகையான சாதத்துக்கும்,சப்பாத்திக்கும்கூட‌ சூப்பராக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 10 Comments »