தேவை:
கருவாடு_100 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய்_5 (அ) வாழைக்காய்_பாதி
மொச்சை_3 கைப்பிடி (ஒரு நபருக்கு ஒரு பிடி)
புளி_எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_முழு பூண்டு(அ)பாதி
மிளகாய்த்தூள்_தேவையான அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_3 டீஸ்பூன்
வடகம்_கொஞ்சம்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ஒரு கொத்து
செய்முறை:
மொச்சையை முதல் நாளே ஊற வைத்து விட வேண்டும்.இப்போது சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்.புளியைத் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும்.கருவாட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கவும்.பூண்டை உரித்துக்கொண்டு,வெங்காயத்தைத் தட்டி (அ) நறுக்கி வைக்கவும்.தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
ஒரு மண் சட்டியில்(அ)வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம்,பூண்டு போட்டு வதக்க வேண்டும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து அதனுடன் கருவாடு சேர்த்து வதக்கவும்.பிறகு மொச்சை சேர்த்து வதக்கி,பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி, காரம்,உப்பு சரிபார்த்து,மூடி வைத்து கொதிக்க விடவேண்டும்.
நன்றாகக் கொதிக்கும்போது கத்தரிக்காயை நறுக்கி (விரும்பிய வடிவத்தில்) குழம்பில் போட்டு கலக்கி விடவும்.நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு குழம்பை இறக்கி மூடி வைக்கவும்.இது முதல் நாளை விட அடுத்த நாள்தான் மிகவும் நன்றாக இருக்கும்.இதை சாதம்,இட்லி,தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு:
பிஞ்சு கத்தரிக்காயானால் காம்பை மட்டும் எடுத்து விட்டு நாலாகக் கீறி முழுதாகப் போடலாம்.வாழைக்காயானால் வட்டமாக, சற்று பெரிய துண்டுகளாகவே போடலாம்.