இதுநாள் வரை கடையிலிருந்து வாங்கும் ‘ரெடிமேட் மிக்ஸ்’களைப் பயன்படுத்தியே கேக்,குக்கீஸ் செய்வேன்.
இந்த முறை இங்கும் அங்கும் தேடியலைந்து ஓட்ஸ் குக்கி செய்தேன்,சூப்பராக வந்தது.
ஓட்ஸை அப்படியே போட்டு செய்ததே வாசனையுடன் சுவையாக வரும்போது,வறுத்துப் பொடித்து செய்தால் என்ன எனத் தோன்றுகிறது.மேலும் வெண்ணெய்,சர்க்கரையின் அளவுகளைக் கொஞ்சம் குறைத்து செய்து பதிவிடுகிறேன்.
என்னிடம் electric mixer இல்லை என்பதால் whisk & கையைப் பயன்படுத்திக்கொண்டேன்.
சேர்க்க வேண்டிய பொருள்களை தனித்தனியாக கோடு போட்டுள்ளேன். அதன்படி பிரித்து வைத்துக்கொண்டால் சேர்க்க எளிதாக இருக்கும்.
தேவையானவை:
மைதா_3/4 கப்
பேகிங் சோடா_1/2 டீஸ்பூன்
உப்பு_1/2 டீஸ்பூன்
______ _ _ _ _________
வெண்ணெய்/Unsalted butter_1/2 கப்
ப்ரௌன் சுகர்/Brown sugar_3/4 கப் (ப்ரௌன் சுகர் கைவசம் இல்லாததால் raw cane sugar சேர்த்திருக்கிறேன்.)
____________ _ _ _ ___________
முட்டை_1
Pure vanilla extract_ஒரு டீஸ்பூன்
_________________ _ _ _ _____________________
ஓட்ஸ்_3 கப்
விருப்பமான நட்ஸ்/Nuts_ஒரு கை
விருப்பமான ட்ரை ஃப்ரூட்ஸ்/Dry fruits_ஒரு கை
சாக்லெட் சிப்ஸ்/Chocolate chips_ஒரு கை
நான் ஓட்ஸுடன் உலர் திராட்சையும்,’சாக்லெட் சிப்’பும் சேர்த்திருக்கிறேன்.
___________ _ _ _ ____________________
செய்முறை:
மைதா,பேகிங் சோடா,உப்பு மூன்றையும் ஒரு பௌளில் கொட்டி விஸ்க்கால் நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.
பயன்படுத்தும் பட்டர் அறை வெப்பநிலையில் இருக்கட்டும்.பட்டர் மென்மையாகும்வரை நன்றாக விஸ்க்கால் கலக்கவும்.
பிறகு அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் குழையும்வரை கலக்கவும்.
அடுத்து இதனுடன் முட்டை,vanilla extract இரண்டையும் சேர்த்து ஸ்மூத்தாக வரும்வரை நன்றாகக் கலக்கவும்.
இவற்றுடன் மைதா கலவையைக் கொட்டிக் கலக்கவும்.
எல்லாம் நன்றாக,ஒன்றாக சேர்ந்த பிறகு ஓட்ஸ்,நட்ஸ்,ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து விஸ்க்கால் கலக்கிவிட்டு ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
ஒருமுறை கலவையை கையாலேயே மென்மையாகப் பிசைந்துகொள்ளவும்
ஒரு baking sheet ல் parchment paperஐ போட்டு 1/4 கப் அல்லது ஒரு குழிவான கரண்டி அல்லது ice cream scoop அல்லது கையாலேயே சிறுசிறு எலுமிச்சை அளவுக்கு எடுத்து படத்தில் உள்ளதுபோல் தனித்தனியாக வைத்து லேஸாகத் தட்டையாக்கி விடவும்.
பிறகு தட்டை ஓவனில் வைத்து சுமார் 10 லிருந்து 12 நிமிடங்கள் பேக் செய்யவும்.குக்கியைச் சுற்றிலும் லேஸான ப்ரௌன் நிறம் வரும்போது எடுத்து ஆறவிடவும்.
மீதியுள்ள கலவையை மீண்டும் இவ்வாறே செய்யவும்.சுமார் 20 குக்கிகள் வரை வரும்.
இப்போது நல்ல கரகர,மொறுமொறு ஓட்ஸ் குக்கிகள் தயார்.கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.