தேவையானவை:
உருளைக்கிழங்கு _1
ப்ரோக்கலி_1
முழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
பூண்டிதழ்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
முழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்
உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்
ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்
உருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்
எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.
இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.