பொரி உருண்டை

பாகு கொஞ்சமாக செய்வதால் பாகு காய்ச்சும் பாத்திரம் அகலமாயிருப்ப‌தைவிட கொஞ்சம் சிறியதாக‌  இருந்தால் நல்லது.

வெல்லம் அதன் நிறத்தில் இல்லாமல் வெள்ளையாக இருந்ததால் அந்த அழகான லைட் ப்ரௌன் கலரில் உருண்டைகள் வரவில்லை.எனினும் சுவையில் மாற்றமில்லை.

தேவையானவை:

பொரி_4 கப்
வெல்லம்_1/2 கப்
ஏலக்காய்_1

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பொரியை எடுத்து வைக்கவும்.கிண்ணம் பாகு ஊற்றிக் கிளற வசதியாக இருக்க வேண்டும்.ஏலக்காயையும் பொடித்து பொரியில் கலந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தப் பொடித்துப் போட்டு (கல்,மண் இல்லாமல்) அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மிதமானத் தீயில் அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் முழுவதும் கரைந்து பாகு முற்றிய பதம் வந்ததும் எடுத்துப் பொரியில் ஊற்றி மத்தின் காம்பால் நன்றாகக் கிண்ட வேண்டும்.

பிறகு ஆறியதும் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

இப்போது மிக எளிதாக செய்யக்கூடிய ,சத்தான,இனிப்பான, மொறுமொறுப்பான பொரி உருண்டைகள் தயார்.