புலாவ்

என்னடா இது! சமைக்கும்போது இவ்வளவு ஆவி வருதேன்னு பார்த்தால்………Halloween pulav ஆம் !

IMG_1181

**********************************************************************************************************************

Halloween special ஆக மூன்று புலாவ்ஸ், விருப்பம் எதுவோ அதை செலக்ட் பண்ணிக்கோங்க!

1. காய்கறி புலாவ்

IMG_1226

2. பருப்புகீரை புலாவ்

pulaav

3. வெந்தயக்கீரை புலாவ்

IMG_1811

*******************************************************************************************************************

இங்கு காய்கறியில் செய்த புலாவ் ரெஸிபி கொடுத்துள்ளேன்.  இந்த புலாவ் சூப்பர் சுவையில் இருக்கும் என்பதால் நம் விருப்பத்திற்கேற்ப‌ காய்கறிகள், கீரைகள் என‌ மாற்றி இதே செய்முறையில் செய்து பார்ப்போமே!

தேவையானவை:

பாசுமதி அரிசி _ ஒரு கப்

காய்கறிகள் _ கொஞ்சம்
(மினி உருளை ஒன்று,ரொமானோ பீன்ஸ் இரண்டு,பச்சை பட்டாணி கொஞ்சம்,கேரட் சிறு துண்டு,ப்ரோக்கலி சிறியது ஒன்று)

சின்ன வெங்காயம்_ 4
தக்காளி _சிறியதாக ஒன்று
பச்சை மிளகாய்_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
பொடித்த‌ மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன் (செய்முறை கீழேயுள்ளது.இல்லையென்றால் மிளாய்த்தூளை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.)
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_2
தேங்காய்ப்பால்_ கொஞ்சம்(விருப்பமானால்)
புதினா & கொத்துமல்லி
எலுமிச்சை சாறு
உப்பு_தேவைக்கு

(பொடித்த‌ மிளகாய்த்தூள்____இந்த அளவுகள் என்றில்லை,நானாக இவற்றில் கொஞ்சம்கொஞ்சமாக எடுத்து, அவை: கிராம்பு, பட்டை,பிரிஞ்சி இலை,காய்ந்த மிளகாய்,கொத்துமல்லி விதை,துவரம் பருப்பு,சீரகம், பெருஞ்சீரகம் இவற்றை வெறும் வாணலில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிக்கன்,குருமா குழம்பு போன்றவற்றில் சேர்ப்பேன். ஒருநாள் மீதமான இந்த தூளை புலாவில் சேர்த்தேன்.நன்றாக இருந்தது. அதிலிருந்து இதையும் சேர்த்துக்கொள்வேன்)

தாளிக்க:

நெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
கிராம்பு
பட்டை
பிரிஞ்சி இலை
சீரகம்
முந்திரி

செய்முறை:

பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைக்கவும்.

அரிசியைக் கழுவிவிட்டு ஒரு 10 நிமி தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிவிட்டு வாணலில் சிறிது நெய் விட்டு சூடு வர வதக்கவும். இவ்வாறு செய்வதால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியே இருக்கும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,காய்கறிகள் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு,இஞ்சி&பூண்டு தட்டிக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி நெய் அல்லது எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக்கொண்டு தட்டி வைத்துள்ள இஞ்சி&பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

வெங்காயம் வதங்கியதும் தக்காளியையும் ,அடுத்து ஊறிய பட்டாணி, காய்கறிகளையும் சேர்த்து வதக்கி ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி(தேங்காய்ப்பால் சேர்ப்பதாக இருந்தால் அதையும் கணக்கில் கொள்ளவும்), மிளகாய்த்தூள் & ஸ்பெஷல் மிளகாய்த்தூள்,உப்பு போட்டு மூடி வேகவைக்கவும்.

தேவையான தண்ணீர் இருந்தால்தான் அரிசி உடையாமல் வேகும். இல்லையென்றால் சாதம் வேகாமல் நொய்யில் செய்தது போல் உடைந்துபோய் இருக்கும்.

தண்ணீர் கொதி வந்ததும் அரிசியைப்போட்டு கிண்டிவிட்டு உப்பு&காரம் சரிபார்த்து,தேவையானால் சேர்த்துக்கொண்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.

pulaav

அரிசியுடன் சேர்ந்து தண்ணீர் கொதிக்கும்போது நனைத்துப் பிழிந்த ஒரு ஈரத்துணி அல்லது பேப்பர் டவல் அல்லது அலுமினம் ஃபாயிலால் படத்திலுள்ளதுபோல்,

pulaav

பாத்திரத்தின் வாய்ப்பகுதியை மூடி மேலே குக்கர் கிண்ணம் அல்லது தட்டில் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தின் மேலே வைத்து தீயை மிகவும் குறைத்து ஒரு 10 நிமி வைக்கவும்.

இடையில் 5 நிமி கழித்து திறந்து எலுமிச்சை சாறு,புதினா&கொத்துமல்லி போட்டு லேஸாகக் கிண்டிவிட்டு மீண்டும் பழையபடியே மூடிவிடவும்.

அடுத்த ஐந்தாவது நிமி கமகம காய்கறி புலாவ் தயார்.

IMG_1226

வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பர்.எனக்கு புலாவ்,பிரியாணி எல்லாமே தனியாக சாப்பிடத்தான் பிடிக்கும்.நீங்க எப்படி?

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »