கருப்பரிசி சுண்டல் / Black rice sundal

 

sundalsundal

கருப்பரிசி சாதத்தை அதன் நிறத்தினால் கொஞ்சம் (கொஞ்சம்தானா!!) சாப்பிடப் பிடிக்காதுதான்.அதனால் அதனை படத்திலுள்ளவாறு சுண்டல் / சாலட் மாதிரி செய்து சாப்பிட்டு பார்ப்போமே!

தேவையானவையை மட்டும் எழுதுகிறேன்.அதன் அளவுகளை உங்கள் விருப்பம்போல் கூட்டியோ,குறைத்தோ கலந்துகொள்ளலாம்.

கருப்பரிசி சாதம்
ஊறவைத்து வேக வைத்த ஏதாவதொரு கடலை
வேக வைத்த சோள முத்துகள்
முளைகட்டிய பாசிப்பயறு (இல்லை என்பதால் சேர்க்கவில்லை)

அலங்கரிக்க:

மெல்லிய அளவில் நறுக்கிய கேரட்
பொடியாக நறுக்கிய மாங்காய் (சேர்க்க மறந்தாச்சு)
பொடியாக நறுக்கிய வெங்காயம்
தேங்காய்ப் பூ
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
உப்பு(தேவையானால்)

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு பௌளில் சாதம்,கடலை,சோளம்  இவற்றை ஒன்றாகக் கலந்து உப்பு தேவையானால் சிறிது தூவிவிட்டு, தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதக்கலவையில் கொட்டிக்கிளறி, கடைசியில் அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றை எல்லாம் போட்டுக் கலந்து சாப்பிட வேண்டியதுதான்.

விருப்பமானால் சிறிது எலுமிச்சை சாறு கலந்துகொள்ள‌லாம்.

என்னால் முடிந்தவரை கலந்து கொடுத்திருக்கிறேன்.மேற்கொண்டு சுண்டலை கலர்ஃபுல் ஆக்கி வீட்டில் உள்ள‌வர்களை சாப்பிட வைப்பது உங்கள் பொறுப்பு……..

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »