தேவையானப் பொருள்கள்:
பிஞ்சு சுரைக்காய்_1
வேர்க்கடலை_2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது
செய்முறை:
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்கவும்.அதே வாணலியில் மிளகாயை எண்ணெய் விடாமல் லேசாக,கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.வேர்க்கடலை ஆறியதும் தோலுரித்து சுத்தம் செய்து,அதனுடன் வறுத்த மிளகாயைச் சேர்த்து மில்ஸியில் போட்டு கொரகொரப்பாகப் பொடிக்கவும்.
சுரைக்காயைக் கழுவித் துடைத்துப் பொடியாக நறுக்கி ஒரு அடி கனமானப் பாத்திரத்தில் போட்டு ஒரு டீஸ்பூன் தண்னீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.சுரைக்காய் வேகும்போதே அதிலிருந்து தண்ணீர் வெளியேறும்.காய் வேக அதுவே போதுமானது.தண்ணீர் குறைவாக வைப்பதால் அடி பிடிக்க வாய்ப்புண்டு.எனவே அடிக்கடி கிளறிவிடவும்.வெந்து வரும்போதே உப்பு,பெருங்காயம் சேர்த்துக் கிளறவும்.நன்றாக வெந்த பிறகு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதை எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.