தக்காளி சட்னி (அ) காரச் சட்னி

 

தேவை:

நன்றாக பழுத்த தக்காளி_1
சின்ன வெங்காயம்_10
பூண்டு_2 பற்கள்
காய்ந்த மிளகாய்_2
மிளகு_ 2 (காரம் விரும்பினால்)
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு_1/2 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு,மிளகாய் போட்டு(கருகாமல்)வறுத்து , பிறகு வெங்காயம்,பூண்டு வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.இவை ஆறிய பிறகு தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக  அரைத்துக்கொள்ளவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கவும்.இது இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும்.

துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »