தயிர் பச்சடி / Thayir Pachadi

pachadipachadi

தேவையானவை:

தயிர்_ஒரு கப்
சின்ன வெங்காயம்_5 அல்லது பெரிய வெங்காயம்_பாதி
வெள்ளாரி பிஞ்சு_பாதி
கேரட்_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறுதுண்டு
பெருங்காயம்_பெயருக்கு சிறிது
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி தழை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு

செய்முறை:

தயிரில் சிறிது உப்பு சேர்த்து கட்டிகளில்லாமல் கடைந்துகொள்ளவும்.

அதனுடன் கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் விருப்பமான அளவில் நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளவும்.

துளியளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கலக்கி பறிமாறவும்.

பிரியாணி,புலாவ்,கலவை சாதம் இவை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

இந்த வெயில் நாளுக்கு அப்படியேகூட சாப்பிடலாம்.

பச்சடி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 10 Comments »

நீர் மோர்_குடிக்க‌; தாளித்த மோர்_சாதத்துடன் சாப்பிட‌

                                

நீர்மோர்,தாளித்த மோர் இரண்டின் செய்முறையும் ஒன்றுதான்.தாளித்த மோருக்கு எக்ஸ்ட்ராவாக தாளிதம் செய்கிறோம்.அவ்வளவே.முதலில் நீர்மோர் செய்து குடித்துவிட்டு தெம்பாக அடுத்து தாளித்த மோர் பற்றி பார்க்கலாம்.

நீர்மோர்_தேவையானவை:

தயிர்_இரண்டு டேபிள்ஸ்பூன்
தண்ணீர்_இரண்டு டம்ளர்
உப்பு_தேவைக்கு
பெருங்காயத்தூள்_துளிக்கும் குறைவாக‌
வெறும் வாணலில் வறுத்துப்பொடித்த வெந்தயத்தூள்_துளிக்கும் குறைவாக‌
வெறும் வாணலில் வறுத்துப்பொடித்த சீரகத்தூள்_துளிக்கும் குறைவாக‌
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி இலை_ஒன்றிரண்டு இலைகள்

செய்முறை:

தயிரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் வந்துவிடும்.அல்லது கரண்டியைக்கூட பயன்படுத்தலாம். அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நம்ம ஊரில் டீ,காஃபி ஆத்துவோமே அதுமாதிரி இரண்டு ஆத்து ஆத்தவும்.

இதனுடன் மேலே கொடுத்துள்ளத் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது சுவையான நீர்மோர் குடிக்கத் தயார்.

பிறகு விருப்பமானவற்றில்(கப்,டம்ளர் போன்றவை)ஊற்றி குடிக்கலாம்.

தாளித்த மோர்_தேவையானவை:

நீர்மோர்_ஒரு கப்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் அல்லது பச்சை மிளகாய்

(பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டும் நீர்மோரிலேயே இருப்பதால் போடவேண்டுமென்பதில்லை.விருப்பமானால் இவற்றையும் சேர்த்துத் தாளித்துக்கொள்ளலாம்)

செய்முறை:

தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து மோரில் கொட்டிக்கலக்கவும்.

இதனை சாதத்துடன் ரசம் மாதிரி ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.உடன் உருளைக்கிழங்கு பொரியல் அல்லது துவையல் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

தயிர்சாதம்-2

 

தயிர் சாதம் செய்யும்போது தயிர் மட்டும் சேர்த்தோ அல்லது பால்&தயிர் சேர்த்தோ செய்வோம்.போதுமான தயிர் இல்லாத சமயத்தில் இந்த செய்முறை கைகொடுக்கும்.இதில் என்ன விசேஷமென்றால் தயிர் குறைவாக சேர்த்தாலும் மிக அதிகமாக சேர்த்ததுபோலவே இருக்கும்.சுவையும் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை இந்த முறையில் செய்தால் அடுத்தடுத்து இப்படியேதான் செய்வீங்க.

செய்முறைக்கான லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறதே தவிர செய்வது மிக எளிது. அலங்கரிக்க பகுதியை உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
தயிர்_ 3 டேபிள் ஸ்பூன்
சாதம் வடித்த கஞ்சித்தண்ணீர்_சாதத்தில் 1/4 பங்கு
உப்பு_தேவைக்கு

அலங்கரிக்க:

இஞ்சி
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
கேரட்
திராட்சை
மாதுளை முத்துக்கள்
வெள்ளரிப் பிஞ்சு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியை சாதாரணமாக வேக வைத்து வடிக்கவும்.குழைய வேண்டுமென்பதில்லை.நீர் வடிந்ததும் சூடான சாதத்தில் அதன் அளவில் 1/4 பங்கிற்கு இப்போது வடித்த சூடான கஞ்சித்தண்ணியை ஊற்றி ஒரு ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும்.சாதம் உடைந்து,நொறுங்கி தண்ணீருடன் சேர்ந்துவிடும்.

பிறகு தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சாதம் நன்றாக ஆறிய பிறகு தயிர்,உப்பு சேர்த்துக் கிண்ட வேண்டும்.தயிர் கொஞ்சமே சேர்த்தாலும் நிறைய சேர்த்ததுபோல் இருக்கும்.

அதன் பிறகு இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்துமல்லி இலை,கேரட், திராட்சை,மாதுளை முத்துக்கள்,வெள்ளரிப் பிஞ்சு இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்துவிடலாம்.

இப்போது சுவையான வெயிலுக்கேற்ற தயிர் சாதம் ரெடி.இதிலேயே காரம்,காய்,பழமென எல்லாம் இருப்பதால் தொட்டு சாப்பிட எதுவுமே தேவையில்லை.அப்படியே சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 15 Comments »

மோர்க் குழம்பு

தேவையானப் பொருள்கள்:

தயிர்_1/2  கப்

செளசெள_1 கப் (நறுக்கியது)

துவரம் பருப்பு_1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்

சீரகம்_1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்_1

மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்

பெருங்காயம்_சிறிது

உப்பு_ தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

சீரகம்

ஓமம்_கொஞ்சம்(வாசனைக்கு)

மணத்தக்காளி வற்றல்_கொஞ்சம்

காய்ந்த மிளகாய்_1

பெருங்காயம்_சிறிது

கறிவேப்பிலை_1 கொத்து

செய்முறை:

பருப்புகள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைக்கவும்.அதே சூட்டில் சீரகத்தைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். பருப்புகளைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.அது ஊறுவதற்குள் செளசெள காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.

பருப்புகள் நன்றாக ஊறியவுடன் மிக்ஸியில் போட்டு தேவையானத் தண்ணீர் சேர்த்து  மைய அரைத்தெடுக்கவும்.கூடவே பச்சை மிளகாய், சீரகம் , கறிவேப்பிலை 2 இலைகள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.தயிரில் 2 கப்புகள் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நீர்க்க கடைந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும். அடுத்து அரைத்த பருப்புக் கலவையை ஊற்றி கட்டித் தட்டாமல் கலக்கி விடவும். அடுத்து மஞ்சள் தூள்,உப்பு,செளசெள இவற்றை  அதில் போட்டு மிதமானத் தீயில் கொதிக்கவிடவும்.கொஞ்ச நேரம்  கொதித்த பின் மோரை ஊற்றிக் கலக்கி இறக்கி விடவும்.அடுப்பிலேயே இருந்தால் மோர் திரிந்து கெட்டு விடும்.

இதையே வேறொரு முறையில் வைப்பதானால்  முதலில் குழம்பைக் கொதிக்க விட்டுக் கடைசியில் தாளித்துக் கொட்டியும் இறக்கலாம்.

குறிப்பு:

இக் குழம்பிற்கு செளசெள நீங்கலாக வெண்டைக்காய்,பூசனிக்காய்  போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.எந்தக் காயாக இருந்தாலும் முதலில் காயைத் தனியாக வேக வைத்துத்தான் சேர்க்க வேண்டும்.வெண்டைக்காயை மட்டும் எண்ணெயில் நன்றாக வதக்கிச் சேர்க்க வெண்டும்.

தயிர் சாதம்

 

தேவை:
அரிசி_ 2 கப்
பால்_ 3 கப்
தயிர்_ 1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
கடுகு_1/4 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
சீரகம்_கொஞ்சம்
முந்திரி_10
உலர் திராட்சை_10
காய்ந்த மிளகாய்_2
இஞ்சி_1 துண்டு
பச்சை மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_ 1 டீஸ்பூன்

அலங்கரிக்க:
கேரட்_1 துண்டு
வெள்ளரி_ 1 துண்டு
திராட்சை_10
கொத்துமல்லி இலை_1 கொத்து

செய்முறை:

சாதத்தை கொஞ்சம் குழைவாக வேகவைக்கவும்.ஆற வைக்க வேண்டாம்.பாலை நன்றாகக் காய்ச்சி சூடான சாதத்தில் ஊற்றிக் கிளறவும்.இப்போது சாதம் உடைந்து நன்றாகக் குழைந்திருக்கும்.சாதம் இளஞ் சூடாக இருக்கும்போதே தயிர்,உப்பு சேர்த்துக் கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும்.கேரட்,வெள்ளரிக்காய் இவற்றை வேண்டிய வடிவத்தில் நறுக்கி,அதனுடன் திராட்சையையும் பரிமாறும்போது சேர்த்துக் கொள்ளலாம்

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . Leave a Comment »