வேறு எதற்கு?குளிரை விரட்டவும்,விட்டமின்_D க்காகவும்தான்!
எப்படி இருந்த நான்…
இப்படி ஆயிட்டேன்!!!
இங்குள்ள அழகான தெருக்களில் இதுவும் ஒன்று.சரியாக ஒரு மாதத்திற்குமுன் எவ்வளவு அழகாக இருந்த இந்தத் தெரு இப்போது இலைகளெல்லாம் உதிர்ந்து வெறும் கிளைகளுடன் இப்படி இருக்கிறது! இதுவுமே ஒரு அழகுதான்.
சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்,’கவலை வேண்டாம்,இன்னும் இரண்டு மாதங்களில் பூத்துக்குலுங்கி, இளந்தளிர்களுடன் அழகாகும்போது மீண்டும் படமெடுத்து அதையே ஒரு பதிவாக்கிவிடுகிறேன்’,என்று.
இலையுதிர் காலம் வரும்போதே மரங்களிலுள்ள இலைகள் எல்லாம் பழுத்து,நிறம் மாறி,உதிரத் தொடங்கிவிடும். நிறம் மாறிய சமயம்,எல்லா மரங்களும் பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு என கலந்து,பார்க்க அழகாக இருக்கும்.ஒரு காற்று,லேசான தூறல் வந்தால் போதும், இலைகள் உதிர்ந்துவிடும்.அதன்பிறகு வெறும் கிளைகள், குச்சிகளாகத்தான் காட்சியளிக்கும்,வசந்தகாலம் வரும்வரை.
இப்போது ஒரு வாரமாக லேசான காற்று,சிறுசிறு தூரல்கள்.இவற்றினால் இலைகள் முழுவதுமாக உதிர்வதற்குள் படமெடுத்துவிட வேண்டுமென்று இன்று வாக்கிங் போனபோது எடுத்த படங்கள் இவை.பிடிச்சிருக்கான்னு வந்து சொல்லுங்க.வழக்கம்போல் படத்தைப் பெரியதாக்கிப் பார்த்தால்தான் அதன் அழகு தெரியும்.
வழியில் ஒரு பூங்காவில் உள்ள மரங்களூடே சூரிய ஒளி நுழையும் அழகான காட்சி.
தெருவின் நடுவில் நின்று எடுத்திருந்தால் அழகாக வந்திருக்கும்.கார்கள் போய்க்கொண்டு இருந்ததால் ஒரு ஓரமாக நின்று எடுத்த படம்.நம்ம ஊரு வேப்பிலை மரம் மாதிரியே இருக்கில்ல!
இந்தத் தெரு எவ்வளவு அழகா இருக்கு!
தெருவின் ஓரத்தில் உள்ள மரங்கள்.மீதமுள்ள இலைகள் இன்று உதிரலாமா இல்லை நாளையா? என்பதுபோல் உள்ளது.
இவை எங்க அப்பார்ட்மெண்டில் உள்ள மரங்கள். சில மரங்களின்,இலைகளின் நிறம் மாறிக்கொண்டும்,நிறம் மாறியவை உதிர்ந்துகொண்டும் உள்ளன.