வேர்க்கடலை சுண்டல்

 

தேவை:

வேர்க்கடலை_1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

கடுகு_கொஞ்சம்
உளுந்து_கொஞ்சம்
சீரகம்_கொஞ்சம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
சின்ன வெங்காயம்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
தேங்காய்ப்பூ_1 டீஸ்பூன்
எண்ணெய்_1/2 டீஸ்பூன்

செய்முறை:

வேர்க் கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும்.அடுத்த நாள் அதை நன்றாக கழுவி  விட்டு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.நன்கு வெந்ததும் நீரை வடித்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து கடைசியில் சின்ன வெங்காயம் சேர்த்து உடனே சுண்டலில் கொட்டிக் கிளறவும். பரிமாறும்போது தேங்காய்ப் பூ சேர்க்கலாம்.

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »