Tips

 

நமது சமையலறைக்குத் தேவையான பயனுள்ள சிறுசிறு குறிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்வோமே !

 

IMG_7604_FotorIMG_8066

செடியுடன் கேரட் வாங்கினால் முதல் வேலையாக கேரட்டை செடியிலிருந்து பிரித்து எடுத்து விடுங்கள். செடியுடனேயே இருந்தால் செடி தான் தொடர்ந்து வளர்வதற்குத் தேவையான சத்துக்களை கேரட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும். பிறகு ? கேரட்டிலிருக்கும் சத்துக்கள் குறைந்துவிடும்.

***************************************************************************************************************

பல் மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் பேஸ்ட் பல் துலக்க முடியாத அளவில்தான் இருக்கும். முன்பெல்லாம் தூக்கிப்போட்டுவிடுவேன். ஆனால் இப்போதெல்லாம் அதை வைத்து sink,  bathtub என சுத்தம் செய்தால் பளிச்பளிச் என்பது மட்டுமல்லாமல் நல்ல வாசனையாகவும் இருக்கிறது.

*************************************************************************

அசைவ உணவு சமைத்து, சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை என்னதான் dish soap போட்டுக் கழுவினாலும் அசைவ வாசனை சரியாகப்போகாது. அத‌னால் கழுவி முடித்த பிறகு சிறிது கடலைமாவு அல்லது பச்சைப்பயறு மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வாசனை போன இடம் தெரியாது. பாத்திரமும் பளிச்.

இதேதான் எண்ணெய் பாத்திரங்களுக்கும்(வாணல்). கடலைமாவு போட்டுக் கழுவினால் பளிச் என மின்னும்.

இதுவே கைகளுக்கும் பொருந்தும்.

**********************************************************************************

பீன்ஸை ச‌மையலுக்குப் பயன்படுத்தும்போது நாம் அதன் காம்பு & நுனி பகுதியை நறுக்கி போட்டுவிடுவோம்தானே. அந்த நுனிப்பகுதியில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளனவாம். ஒரு பக்கம் மட்டும் நறுக்குவதால் வேலையும் மிச்சம்.

*****************************************************************************************

இஞ்சியின் தோலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத்தானே தெரியும். சிறு துண்டு என்றால் நகத்தாலேயே நீக்கிவிடலாம். அதிக அளவில் என்றால் ? கத்தியைப் பயன்படுத்தினாலும் நிறைய இஞ்சி வீணாகும். அதற்கு பதிலாக இப்படி ஸ்பூனால் சுரண்டினால் இஞ்சியில் சிறிதும் வீணாகாமல் தோல் மட்டுமே தனியாக வந்துவிடும். 

20160506_100014_Fotor  20160506_100552_Fotor

20160506_110239_Fotorபீட்ரூட் தோல்கூட என்னமாய் வருகிறது பாருங்கோ !

****************************************************************************

மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: