இட்லி

 தேவையானவை

புழுங்கல் அரிசி – 8 கப்புகள்

உளுந்து – 1/2 கப்

வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு_தேவையான அளவு

செய்முறை

வெந்தயத்தை முதல் நாள் இரவே அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.அடுத்த நாள் அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவிட வேண்டும்.சுமார் ஆறு மணி நேரம் ஊறவிட வேன்டும்.பின் உளுந்தின் தோலியைக் கழுவி விட்டு ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்து விட வேண்டும்.வெந்தயத்தையும் அவ்வாறே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து  கிரைண்டரில் போட்டு நீர் விட்டு கொடகொடவென மைய அரைக்க வேண்டும்.ஒரு 1/2  மணி நேரம் ஆன பிறகு(இடை இடையே சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்)  ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து கொடகொடவென கொடப்பி வைக்கவும்.இல்லை எனில் மாவு அமுங்கிவிடும்.

பிறகு அரிசியைப்போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கரைத்து வைக்கவும்.அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். வெண்மையான பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தனியாக எடுத்து சிறிது நீர் விட்டு கரைத்து தோசையாக வார்க்கலாம். நமக்கு விருப்பமான சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.

4 பதில்கள் to “இட்லி”

  1. pappathi Says:

    ஹாய்.. 8 கப் அரிசிக்கு , 1/2 கப் உளுந்து சரியாக இருக்குமா? எனக்கு இட்லி மெதுவாக வராது. நான் இந்த அளவு போடாததால் தான் சரியாக வரவில்லையா?
    நீங்கள் செய்திருக்கும் இட்லி பஞ்சு போல் இருக்கிறது. வாழ்த்துக்கள்..

    • chitrasundar5 Says:

      pappathi,
      எனக்கும் ஒரு கேள்வி உண்டு.சிலர் அரிசியும் உளுந்தும் 1:1,2:1 என்பார்கள். எப்படி வரும் என்று தெரியவில்லை.எனக்கு இந்த அளவில் போட்டல்தான் பஞ்சுபோல்,வெண்மையாக‌ வரும்.உளுந்து ஒன்றிரண்டு அதிகமானால்கூட இட்லியின் நிறம் கம்மியாகவும்,சப்பையாகவும் வரும்.

      ஒன்னுசெய்யுங்க.முதலில் அளவைப் பாதியாகக் குறைத்து 4:1/4 என்று போட்டுப்பாருங்க.நல்ல புழுங்கலரிசியாக இருக்க வேண்டும்.உளுந்து அரைக்க ஃப்ரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் நல்ல பஞ்சுபோல் நிறைய மாவு காணும். அதேபோல் வெந்தயத்தையும் கூட்டி செய்து பாருங்க.எப்படி வந்ததுனு வந்து சொல்லுங்க.

  2. MahiArun Says:

    🙂 shall try it next time Chitra Akka..but still I have my own toubts! 😉 let me try n see…

  3. ammu Says:

    Hai akka.. na ipa dhan unga ta irundhu samayal kathuka arambichuruken so bless me………………….


மறுமொழி இடுக‌