பூண்டு ஊறுகாய்


தேவையானவை:

பூண்டு_3
எலுமிச்சம் பழம்_3 (பெரியது)
உப்பு_தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

கடுகு_ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_3
கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
மஞ்சள்_சிறு துண்டு (இதை வறுக்கத் தேவையில்லை)

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
பெருங்காயம்

  

செய்முறை:

பூண்டிதழ்களை உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.

எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து  வைக்கவும்.

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆற வைத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அதே வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு,பெருங்காயம் தாளித்து தீயை மிதமாக்கிக்கொண்டு பூண்டு சேர்த்து வதக்குவும்.

பூண்டு லேசாக வதங்கியதும் எலுமிச்சை சாறு விட்டு அடுப்பை அனைத்துவிடவும்.

பிறகு பொடித்து வைத்துள்ளப் பொடியைச் சேர்த்து,தேவையானால் உப்பும் சேர்த்துக் கிளறி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

பூண்டு காரமான மிளகாய்த்தூள்,புளிப்பான எலுமிச்சை சாற்றில் ஊற ஊற நன்றாக இருக்கும்.

இது சாத வகைகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 14 Comments »

14 பதில்கள் to “பூண்டு ஊறுகாய்”

  1. chollukireen Says:

    ஊறுகாய் எல்லாவற்றிலும் சேர்த்துச் சாப்பிடும் மாதிரி ருசியாக இருக்கு.பாத்ததும் சொல்லுகிறேன். பூண்டுடேஸ்ட், எலுமிச்சை,காரம் நல்ல காம்பினேஷன். இஞ்சியும் சேர்த்துப் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்

    • chitrasundar5 Says:

      காமாட்சி அம்மா,

      இந்த பூண்டு ஊறுகாய் எனக்குப் பிடிக்கும்.எங்க வீட்டில் அவருக்கு இஞ்சி சேர்த்தால்தான் பிடிக்கும்.போட்டு ஒரு வாரம்தான் ஆகுது.இப்போ இஞ்சி சேர்க்கலாமா?எப்படி சேர்ப்பது.முடியும்போது சொல்லுங்க.நன்றிமா.

  2. yasmin Says:

    நான் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த பூண்டு ஊறுகாய் செய்முறை தந்ததற்கு நன்றி. என் பாட்டி செய்யும் ஊற்காய் போல் இருக்குது.

  3. மகி Says:

    பூண்டு ஊறுகாய் நல்லா இருக்குங்க. கொத்தமல்லி, சீரகமெல்லாம் போட்டு ஊறுகாய்..எனக்குப் புதுசா இருக்கு. ஆனா ஊறுகாயைப் பார்க்கவே சூப்பரா இருக்கும்னு தெரியுது! 😛

    • chitrasundar5 Says:

      மகி,

      இஞ்சி,பூண்டுடன் மேலும் சில பொருட்கள் சேர்த்து (lemon juice இல்லாமல்) துவையல் அரைப்பேன்.அதன் சுவையே தனிதான்.அதை வைத்துத்தான் இந்த ஊறுகாய் செய்வேன்.ரொம்ப நல்லாருக்கும்.நன்றி மகி.

  4. rajalakshmiparamasivam Says:

    உங்களுடைய பூண்டு ஊறுகாய் ரெசிபிக்கு நன்றி
    ராஜி

    • chitrasundar5 Says:

      ராஜி,

      உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.மீண்டும் சந்திப்போம்.நன்றி.

      • rajalakshmiparamasivam Says:

        சித்ரா
        என் வலைத் தளத்திற்கு வருகைத்தந்து உங்கள் மேலான கருத்துக்களை இடவும்.
        நான் இப்பொழுது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உங்களை போன்றவகளின் யோசனைகள் என்னைப் போன்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
        நன்றி,

        ராஜி.

      • chitrasundar5 Says:

        ராஜி,

        போய்ட்டு வந்துட்டேங்க.நகைச்சுவையா எழுதறீங்க.அரட்டையை ஆரம்பிங்க, நாங்களும் கலந்துகொள்கிறோம்.


மறுமொழி இடுக‌