பால் கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
பால்_ஒரு கப்
சர்க்கரை_தேவைக்கு
தேங்காய்ப்பூ_1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ_10 இதழ்கள் (விருப்பமானால்))
ஏலக்காய்_1
உப்பு_துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து,வடிகட்டி,மாவாக இடித்து,இட்லிப்பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.

பிறகு அதில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து,சிறிது சிறிதாக warm water  சேர்த்து கொழுக்கட்டை மாவு/இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

பிறகு படத்திலுள்ளதுபோல் சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.சிறிய அளவில் மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து முதலில் க்ளாக் வைஸாக உருட்டி, பிறகு நேராக உருட்டினால் வந்துவிடும்.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.

இவ்வாறு உருட்டியவற்றை இட்லிப்பானையில் வைத்து அவிக்கவும்.இது சீக்கிரமே வெந்துவிடும்.

இதற்கிடையில் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து காய்ச்சவும்.காய்ந்ததும் சர்க்கரை,குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.மிதமானத் தீயில் வைக்கவும்.

இப்போது வெந்த,சூடான‌ கொழுக்கட்டைகளை எடுத்து சூடான பாலில் போட்டு கலக்கிவிடவும்.ஒரு 5 நிமி கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.இப்போது தேங்காய்ப்பூ,பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்.

கொழுக்கட்டை பாலில் வெந்து,ஊறி சுவையாக இருக்கும்.சூடாகவோ அல்லது ஆறியபிறகோ ஒரு பௌளில் எடுத்து ஸ்பூனால் சாப்பிடலாம்.

18 பதில்கள் to “பால் கொழுக்கட்டை”

  1. pappathi Says:

    செய்முறை ரொம்ப எளிதாக இருக்கிறது…படத்தை பார்க்கும்போதே சுவை தெரியுது.

    • chitrasundar5 Says:

      pappathi,

      கொழுக்கட்டை/இடியாப்பத்திற்கான மாவு தயாரித்துவிட்டால் மற்ற வேளைகள் எளிதாகிவிடும்.பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவாங்க.செஞ்சி பாருங்க.

  2. chollukireen Says:

    சித்ரா எனக்குப் பிறந்தநாள்ப் பரிசாக பால் கொழுக்கட்டை.கிராமத்து மணம் வீசும் இனிமையான கொழுக்கட்டையை விரும்பாதவர் யார்
    நன்றாக இருக்கு.

  3. chollukireen Says:

    என் பிறந்த நாளை ஹைலைட்டாக வெளியிட்டு கௌரவம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. எல்லோருக்கும் ஆசிகள் . அன்புடன்
    சொல்லுகிறேன்.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      ஆமாம்.உங்க பிறந்தநாள் ஸ்வீட்தான் இந்தக்கொழுக்கட்டை.

      80 வது பிறந்த நாள் என்றால் சும்மாவா? எவ்வளவு அநுபவம்!இவ்வளவு வயதிலும் தம்பதியராய்,பிள்ளைகளுடன் சந்தோஷமாய் இருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் அருள் இருக்க வேண்டும்.விட்டால் நான்பாட்டுக்கு எழுதிக்கொண்டே போவேன்.ஆசிகளுக்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.

  4. yasmin Says:

    சூப்பரான சிம்பிளான குறிப்பு. வாழ்த்துக்கள்………….

  5. Mahi Says:

    பர்த்டே ஸ்பெஷல் கொழுக்கட்டையா? அமோகமா இருக்கு போங்க! அழகாகவும் இருக்கு குட்டி குட்டியா! ஒரே மாதிரி,ஒரே சைஸில்…!

    /சிறிய அளவில் மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து முதலில் க்ளாக் வைஸாக உருட்டி, பிறகு நேராக உருட்டினால் வந்துவிடும்.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்./இது நான் முயற்சித்தேன், கொழுக்கட்டைக்கு இல்ல, வேறு ரெசிப்பியில்! ஆனா உங்க அளவுக்கு யூனிஃபார்மான வடிவங்கள் கிடைக்கவில்லை! :))

    • chitrasundar5 Says:

      ஆமாம் மகி,எல்லாம் புழுவின் முட்டைகள் மாதிரி ஒரே யூனிஃபார்மாதான் இருக்கு.

      “அமோகமா இருக்கு போங்க! அழகாகவும் இருக்கு குட்டி குட்டியா! ஒரே மாதிரி,ஒரே சைஸில்…!ஆனா உங்க அளவுக்கு யூனிஃபார்மான வடிவங்கள் கிடைக்கவில்லை!” எனக்குப் பெருமை தாஆஆஆங்க முடியவில்லை!நன்றி மகி.

  6. அப்பாதுரை Says:

    கடையில் பேகேஜ்ட் அரிசி மாவை வைத்து இதைச் செய்யலாமா? செய்முறை படிக்க சுலபமாக இருக்கிறது. பால் கொழுக்கட்டை சாப்பிட்டதே இல்லை. மாவு தயார் செய்யும் வேலை பெரும் வேலையாகப் படுகிறதே?

    • chitrasundar5 Says:

      அப்பாதுரை,

      தங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

      கடையில் கிடைக்கும் மாவில் செய்தால் நன்றாக வருமா எனத் தெரியவில்லை.கொழுக்கட்டை,இடியாப்பம்,புட்டு எல்லாமே புது ஈர மாவில் செய்தால் சாஃப்டாக வரும்.மாவு தயாரிப்பதற்கு நம்ம ஊர் மிக்ஸி என்றால் ஓரளவிற்கு பிரச்சினையில்லை.

  7. mahalakshmivijayan Says:

    எனக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை இது! உங்கள் செய்முறை படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.. நான் வேறு மாதிரி செய்வேன். புழுங்கலரிசியை ஊற போட்டு விட்டு பின்பு அதை அரைத்து,ஒரு தேக்கரண்டி எண்ணையில் மாவை வதக்கி, கையில் பிசுக் என்று ஒட்டாத நேரம் அதை எடுத்து சிறு உருண்டைகளாகி, எடுத்து வைத்த தேங்காய் பாலில் அதை வேக போட்டு எடுத்து, பின் கெட்டியான தேங்காய் பாலில், வெந்த கொழுக்கட்டைகளை இட்டு, இனிப்புக்கு சீனி சேர்த்து, சிறிது நேரம் அடுப்பில் கொதிக்க விட்டு இறக்குவேன்! பால் கொழுக்கட்டையை பார்த்த சந்தோசத்தில் மனதிலிருந்ததை கொட்டி விட்டேன் 🙂

    • chitrasundar5 Says:

      கூடுமானவரை புழுங்கல் அரிசியைத்தான் பயன்படுத்தப் பார்ப்பேன்.ஆனால் புட்டு, கொழுக்கட்டை இதற்கெல்லாம் பச்சரிசியைத்தான் பயன்படுத்துவேன். உங்கள் செய்முறைப்படி புழுங்கல் அரிசியில் செய்து பார்க்கிறேன். இன்னும் சாஃப்டா வரும்னு நினைக்கிறேன்.

      இப்படி அடிக்கடி வந்து கொட்டிட்டு போங்க. எங்களுக்கும் நல்லநல்ல ரெஸிபி கிடைக்கும். வருகைக்கு நன்றிங்க.

  8. Rajarajeswari jaghamani Says:

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்


மறுமொழி இடுக‌