தேவை:
கேழ்வரகு மாவு_1 கப்
முருங்கைக்கீரை_2 கப்
வெங்காயம்_1
பச்சைமிளகாய்_1
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_4 டீஸ்பூன்
செய்முறை:
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.மாவு,கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இல்லை என்றால் மாவைப் பிசைந்த பிறகு கீரை இருக்குமிடமே தெரியாது.இப்போது மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.எண்ணெய் விடவில்லை என்றால் அடை வெள்ளையாக இருக்கும்.இப்போது மூடி போட்டு வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.எல்லா வகையான சட்னியுடனும் சாப்பிடலாம்.
மறுமொழி இடுக