பண்டிகைக் காலம் நெருங்குவதால் ஸ்வீட்ஸ்,காரம் செய்வதற்கு கண்டிப்பாக நல்ல நெய் வேண்டும்.அது இருந்தால்தான் சுவையாக மட்டுமல்லாமல் நல்ல மணமாகவும் இருக்கும்.நல்ல வாசனை உள்ள நெய் வேண்டுமானால் வீட்டிலேயே காய்ச்சலாம்.அது ஒன்றும் பெரிய வேலையெல்லாம் இல்லை.ஒரு 1/2 மணி நேர வேலைதான்.கடைசி ஒரு 5 நிமிடங்கள் கவனமாக இருந்தால் போதும்.
நெய் காய்ச்ச வெண்ணெய் வேண்டும்.அதற்கு கடைகளில் கிடைக்கும் unsalted butter வாங்கிக்கொள்ளலாம்.Butter வாங்கினால் முறுங்கைக் கீரையும் கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள்.
Butter ஐ ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு ஒரு தோசைத் திருப்பியால் படத்தில் உள்ளது போல் உடைத்து விட்டு அடுப்பில் medium flame ற்கும் low flame ற்கும் இடையில் தீயை வைக்கவும்.அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது.இடையிடையே அதன் மேல் கவனம் இருந்தால் போதும்.
கரண்டியால் கிளறியெல்லாம் விட வேண்டாம்.பட்டர் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பிக்கும்.
சிறிது நேரத்தில் butter உருகி,வெண்மையாக நுரைத்துக்கொண்டு வரும்.மேலும் சடசடசட வென சத்தம் கேட்க ஆரம்பிக்கும்.இப்போது low flame ல் வைக்கவும்.
பட்டரில் உள்ள திப்பிகள் மேலே மிதக்கும்.அடியிலும் லேசாக ப்ரௌன் நிறத்தில் படிந்திருக்கும்.இவற்றை எதுவும் செய்ய வேண்டாம்.
இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் பார்க்கும் போது திப்பிகள் நல்ல ப்ரௌன் நிறத்திகு மாறி இருக்கும்.அப்போது தோசைத்திருப்பியின் உதவியால் அவற்றை நீக்கிவிடவும்.
அழுக்கை எடுத்த பிறகு ஒரு கொத்து முறுங்கைக் கீரையை நெய்யில் போடவும்.
கீரைப் போடுவது எதற்கு என்று தெரியாது.ஒருவேளை வாசனைக்காக இருக்கலாம்.ஆனால் அம்மாவைக் கேட்டால் நெய்யை முறித்து வைக்க வேண்டும்.அப்போழுதுதான் நீண்ட நாட்களுக்கு நெய் கெட்டுப்போகாமல் இருக்கும் என்று கூறுவார்கள்.
கீரை நல்ல முறுகளாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்..நெய் நன்றாக ஆறும் வரை அப்படியே இருக்கட்டும். நன்றாக ஆறிய பிறகு கீரையை எடுத்து விட்டு (அதை சாப்பிட்டால் கூட நன்றாகவே இருக்கும்.)ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி நெய்யை சுத்தமான,காய்ந்து,உலர்ந்த பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
இதைப் பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தலாம்.தோசை செய்தால் சூப்பராக இருக்கும்.இட்லிப் பொடியில் சேர்த்து சாப்பிடலாம்.எல்லாவற்றிற்கும் மேலாக சூடான சாதம்,பருப்புப் பொடி இவற்றில் கலந்து சாப்பிடும்போது அதன் சுவையே தனிதான்.
4:58 முப இல் ஒக்ரோபர் 25, 2012
nalla pathivu..nan aavin nei vaanga vendum endru enni irundhen..ungal pathivinal unsalted butter vaangi nane prepare panaporen..en paati veetil pasu matil paal karanthu paalai kaaichi ovaru nalum siruga siruga vennai eduthu uriyil vaithu kuripita alavu vanthathum oru nalla naalil nei eduthu (murungai illaium pottu) vaithal antha theruvellam manakkum..athan manam alathiyanathu..thanks
9:18 முப இல் ஒக்ரோபர் 27, 2012
Gnanaguru,
ஆமாம் நீங்க சொல்றது சரிதான்.கிராமங்களில்,நெய் காய்ச்சும் வாசனை வந்ததும்,காய்ச்சுபவர் வீட்டிற்கு,வாங்கறவங்க கிண்ணத்துடன் படையெடுப்பாங்க.காய்ச்சி முடிக்கும்வரை இருந்து வாங்கி வருவாங்க. நெய்யில் பொரித்த அந்த முருங்கை இலைகளையும் வந்திருப்பவர்களுக்குக் கொடுப்பாங்க.அந்த நெய்யில் கேழ்வரகு மாவு & தேன் கலந்து சாப்பிட்டால் அது தனி சுவை.எல்லாம் பழைய நினைவுகள்.இப்போ இதெல்லாம் நடக்குதான்னு தெரியல.
இதில் வீட்டு வெண்ணெயில் செய்யப்படும் நெய் அளவுக்கு இல்லையென்றாலும்(கண்டிப்பாக இருக்காது) ஓரளவுக்கு கடையில் வாங்கும் நெய்யைவிட நன்றாக இருக்கும்.வாங்கி செஞ்சு பாருங்க.நன்றி.
10:06 முப இல் ஒக்ரோபர் 27, 2012
inum unsalted butter vangavillai..have to do..yes veetil pasu valarthu paal karanthu kaichi thayiraki adutha naal kalaiyil 4 maniku(en aayavin muthal vellai ithu than thinamum) thaneer siruga siruga vittu kadainthu vennaiyai siruga siruga kaikalil korthu uriyil serthu pin nalathoru naalil pathamaga nei seivathin alavuku ethuvum varathu..ellam past ayiduchu..i will buy a good land enough to build a home with good space for cow and space for garden..and my mom will sure do ghee for me in that same old way…waiting for that
7:01 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
Gnanaguru,
வெண்ணெய் எடுத்த பிறகு நிறைய நீர்விட்டு கிடைக்கும் அந்த நீர்மோருக்கு இணை எதுவுமில்லை.நாள் முழுவதும் மொண்டுமொண்டு குடிக்கலாம்.அதுவும் கோடை என்றால் சொல்லவேத் தேவையில்லை.
“i will buy a good land enough to build a home with good space for cow and space for garden”____பராமரிக்க ஆள் இருந்தால் பிரச்சினையில்லை.உங்க எண்ணம்போல் அமைய வாழ்த்துக்கள்.
3:30 முப இல் ஒக்ரோபர் 29, 2012
yes enakum that neer more romba pidikum..antha more ai saathathil neraya otri saapidum pothu sema energy ah irukum..nejamave pasu maadu theivam than 🙂 thanks for your wishes chitrasundar5