மைசூர் போண்டா

தேவையானப் பொருள்கள்:

உளுந்து_ ஒரு கப்
கடலைப் பருப்பு_1/2(அ) 1 கப்
மிளகு_1 டீஸ்பூன்
தேங்காய்_ஒரு துண்டு (சிறுசிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
இஞ்சி_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உளுந்து,கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு தோலி இல்லாமல் கழுவி நீரை வடித்து விட்டு உளுந்தை மட்டும் ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்திருந்து, பிறகு வெளியே எடுத்து கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் சுமார் அரை மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.நல்ல பஞ்சு போல் பந்தாக வரும்.அப்போது  ஒரு பாத்திரத்தில் வழித்து நன்றாக அடித்துக் கொடப்பி வைக்கவும்.அதே கிரண்டரில் கடலைப் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மைய அரைக்கவும்.இந்த மாவை உளுந்து மாவுடன் சேர்த்து, மேலும் மிளகு,தேஙகாய்,இஞ்சி,பெருங்காயம்,உப்பு இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து லேசாக உருட்டி எண்ணெயில் போடவும். வேகும்போதே கரண்டியால் திருப்பி விட்டு வெந்து சிவந்ததும் எடுத்து விடவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு எடுத்து சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

2 பதில்கள் to “மைசூர் போண்டா”

  1. Mahi Says:

    Kadalai paruppu serthu Mysore bonda? Interesting! Shall try soon.

    • chitrasundar5 Says:

      மகி,இதைத்தான் மைசூர் போண்டான்னு செய்வாங்க.எங்கம்மா ரெண்டு பருப்பையும் ஒன்னா ஊறவச்சு ஒன்னாவே அரைப்பாங்க.நான் உளுந்தை தனியா அரைச்சிடுவேன்.அப்போதான் மாவு நிறைய வரும்.இது வெண் பொங்கல்+தேங்காய் சட்னியுடன் சூப்பரா இருக்கும்.சீக்கிரமே செஞ்சு பாருங்க.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: