தேவையானப் பொருள்கள்:
தோல் உளுந்து_ஒரு கைப்பிடி
தேங்காய் கீற்று_3
காய்ந்த மிளகாய்_2
புளி_சிறு கோலி அளவு
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
வெறும் வாணலியில் உளுந்து,மிளகாய் இரண்டையும் கருகாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
பிறகு தேங்காய்,மிளகாய் இரண்டையும் முதலில் அரைத்துவிட்டு பிறகு உளுந்து,புளி,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கி விடவும்.இப்போது வாசனையுள்ள,சுவையான சட்னி தயார்.
இது இட்லி,தோசை,சாதம் இவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
மறுமொழி இடுக