தேவையனப் பொருள்கள்:
அவல்_ஒரு கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_ஒரு கப்
குங்குமப்பூ_சிறிது
ஏலக்கய்_1
நெய்_சிறிது
முந்திரி_10
திராட்சை_10
செய்முறை:
வெறும் வாணலில் அவலைப்போட்டு நன்கு சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக உடைத்து எடுத்துக்கொள்ளவும்.அல்லது உடைக்காமல் முழு அவலாகவும் பயன்படுத்தலாம்.
ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.
அது கொதிக்க ஆரம்பித்ததும் அவலைப் போட்டுக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.சீக்கிரமே வெந்துவிடும்.
பாலை சிறிது சூடாக்கி குங்குமப்பூவைக் கலந்து வைக்கவும்.
அவல் வெந்ததும் பொடித்துவைத்துள்ள வெல்லத்தைப்போட்டுக் கிளறவும்.
வெல்லம் கரைந்ததும் பால் ஊற்றிப் பொங்கி வந்ததும் ஏலக்காயைப் பொடித்துப்போட்டு இறக்கவும்.
ஒரு கரண்டியில் நெய் விட்டு முந்திரி,திராட்சையை பொன்னிறமாக வறுத்து,நெய்யைத் தவிர்த்து முந்திரி,திராட்சையை மட்டும் பாயஸத்தில் சேர்த்துக் கிளறவும்.
உளுந்து வடை,அப்பளம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
மறுமொழி இடுக