வெஜிடபிள் பீ(ட்)ஸா/Vegetable pizza

பீட்ஸா செய்முறையில் இரண்டு வேலைகள் உண்டு.(1) பீட்ஸா பேஸ்& (2) ஃபில்லிங். பேஸ் செய்துவிட்டால் ஃபில்லிங் வேலை கொஞ்சம் சுலபமாகிவிடும்.இரண்டுமூன்று முறை செய்துவிட்டால் அதுவுமே சுலபமாகிவிடும்.

பீட்ஸா பேஸ் தயாரிக்க:

மைதா_ஒன்றரை கப்
உப்பு_சிறிது
பேக்கிங் பவுடர்_சிறிது
ஃப்ரெஷ் ஈஸ்ட்_ஒரு டீஸ்பூன்
பால்_1/2 டம்ளர்
தேன் அல்லது சர்க்கரை_ஒரு டீஸ்பூன் அளவிற்கு

செய்முறை:

பாலை சூடுபடுத்தி மிதமான சூடு வரும்வரை ஆற வைக்கவும்.ஒரு கண்ணாடி டம்ளரில் தேன்&ஈஸ்ட் எடுத்துக்கொண்டு அதில் இந்த பாலை ஊற்றி மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும்.சிறிது நேரத்தில் பால் நுரைத்துக்கொண்டு பொங்கியிருக்கும்.பால் பொங்கி வெளியேறாமல் பார்த்துக்கொள்ளத்தான் கண்ணாடி டம்ளர்.

இதற்கிடையில் மைதா,பேக்கிங் பவுடர்,உப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து சல்லடையில் போட்டு இரண்டு முறை சலிக்கவும்.பிறகு ஒரு தட்டில் மாவைக்கொட்டி நுரைத்து பொங்கியுள்ள பாலை சிறிதுசிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவைவிட கொஞ்சம் தளர பிசைந்துகொள்ளவும்.பால் பத்தவில்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையலாம்.பிசைந்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து ஈரத்துணியால் அல்லது மாவு முழுவதும் எண்ணெய் தடவி மூடி போட்டு மூடி வைக்கவும்.

சுமார் ஒருமணி நேரம் கழித்துப்பார்த்தால் பிசைந்துவைத்த மாவு (dough)இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.

மாவு மிகவும் மென்மையாகவும் இருக்கும்.கையில் எண்ணெய் தடவிக்கொண்டு (ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால்தான் பீட்ஸாவுக்கான அந்த வாசனை நன்றாக இருக்கும்)மாவை மென்மையாகப் பிசைந்து கைகளாலேயே பீட்ஸா ஸ்டோன் அளவிற்கு பரப்பி விடவும்.நான் அவன் சேஃப் ட்ரேயைப் பயன்படுத்தியுள்ளேன்.

மாவு காய்ந்து போகாமலிருக்க சிறிது ஆலிவ் ஆயிலை மாவு முழுவதும் தடவிவிட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மீண்டும் மூடி வைக்கவும்.

மீண்டும் பரப்பி வைத்த மாவு நன்றாக உப்பியிருக்கும்.இதுதான் பீட்ஸா பேஸ்.

பீட்ஸா ஃபில்லிங் செய்யத் தேவையானவை:

பீட்ஸா சாஸ்_நான்கைந்து டீஸ்பூன்கள்
பூண்டிதழ்_2
பச்சைமிளகாய்_1
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்_2 டீஸ்பூன்

பீட்ஸாவை அலங்கரிக்க படத்திலுள்ளதுபோல் விருப்பமான காய்கள்,விரும்பிய வடிவத்தில்.ஆலிவ்,கலர் பெப்பர்ஸ்,பைனாப்பிள் போன்றவை இருந்தால் அவற்றையும் சேர்க்கலம்.காய்களை க்ரில் செய்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

மொஸரல்லா சீஸ்_இரண்டு கையளவு(துருவியது)விரும்பினால் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.தட்டில் இடமில்லாததால் தனியே வைத்துள்ளேன்.

பூண்டை தட்டிக்கொண்டு,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலை அடுப்பிலேற்றி ஆலிவ் எண்ணெய் விட்டு பூண்டு&பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு பீட்ஸா சாஸ்,மிளகாய்த்தூள் சேர்த்து பச்சைவாசனை போகக் கிளறிவிட்டு பிறகு இறக்கி ஆறவிடவும்.

இந்த சாஸை பீட்ஸா பேஸ் முழுவதும் பரப்பிவிட்டு அதன்மேல் துருவிய சீஸைத் தூவிவிட்டு அதன்மேல் அலங்கரிக்க வைத்துள்ள காய்களை தேவையான இடைவெளியில் ஆங்காங்கே வைத்து அவற்றின் மேல் மீதமுள்ள சீஸைத் தூவவும்.

பீட்ஸாவைச் சுற்றிலும் தெரியும் மாவுப்பகுதியில் ஆலிவ் ஆயிலைத் தடவிவிடவும்.இது சிவந்து வருவதற்கு.

அவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.அதில் இந்த பீட்ஸாவை வைத்து பேக் செய்யவும்.15 முதல் 20 நிமிடங்களுக்குள் பீட்ஸா தயாராகிவிடும். வெந்ததும் நல்ல வாசனை வரும்.

பிறகு வெளியே எடுத்து ஆறியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு அதன்மேல் சீஸ் தூவியோ அல்லது க்ரஷ்ட் ரெட் பெப்பர் (crushed red pepper)தூவியோ சாப்பிடவும்.

https://chitrasundar5.files.wordpress.com/2012/09/partyeventseniniyaillam.jpg?w=285

18 பதில்கள் to “வெஜிடபிள் பீ(ட்)ஸா/Vegetable pizza”

 1. chollukireen Says:

  பார்ட்டி ஸநேக்ஸ் இவெண்டிற்கு அனுப்பியதா. இதுவும் ஒரு
  நல்லவிதமாக இருக்கு. ஸாமான்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டால் செய்முறையும் மனதில் பதிந்துவிட்டால்
  அழகான ருசியான பிட்ஸா தயார் செய்து விடலாம். நிறைய பேர்களுக்கு உபயோகமாக இருக்கும். நல்லநல்ல பொருட்கள் சேர்ந்ததுதான் பிட்ஸா. அளவோடு சாப்பிட்டால் ஒரு கெடுதலும் இல்லை. முகமலர்ந்த குழந்தைகள் சாப்பிடும் போது எவ்வளவு
  ஆனந்தமுண்டாகிரது….ருசியான பிட்ஸாவை ,சித்ராவின் பிட்ஸாவை எல்லோரும் வரவேற்கிறோம்.

  • chitrasundar5 Says:

   காமாட்சிமா,

   ஆமாம்,பார்ட்டி ஸநேக்ஸ் இவெண்டிற்கு அனுப்பியதுதான்.வீட்டில் செய்து 3 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.வீடு மாறும்போது பீட்ஸா ஸ்டோன், குழிபணியாரக்கல் இவையெல்லம் எப்படியோ மிஸ்ஸாகிவிட்டது.நாங்க இருக்குமிடத்திற்கு பக்கத்திலேயே roundtable pizza இருப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.உங்க பீட்ஸா பதிவைப் பார்த்ததும் மீண்டும் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.நன்றி உங்களுக்குத்தான்.

   எல்லாமே நல்ல பொருள்களாகத்தானே சேர்க்கிறோம்.யார்யாருக்கு எது பிடிக்காதோ அவருக்கான பகுதியில் அதை குறைத்தோ அல்லது வைக்காமலோ விட்டுவிட‌லாம். என் மகளுக்கு வேண்டிய பகுதியில் தக்காளி வைக்கமாட்டேன்.நீங்க சொல்வது போலவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும்போது ஒரு நிறைவு.

   “ருசியான பிட்ஸாவை ,சித்ராவின் பிட்ஸாவை எல்லோரும் வரவேற்கிறோம்”_நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.

   • chollukireen Says:

    கிரெடிட்லே எனக்கும் பங்குவேறு கொடுத்திருக்கிறாய். ஸந்தோஷம். அன்புடன்

   • chitrasundar5 Says:

    காமாட்சிமா,

    மீண்டும் செய்யத் தூண்டியதால் நிச்சயம் கிரெடிட்லே உங்களுக்கும் பங்கு இருக்கு.அங்குமிங்கும் உங்களைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது.கடவுள் அருளால் இப்படியே நல‌மாக‌ இருக்கவேண்டும்.அன்புடன் சித்ரா.

 2. faizakader Says:

  மிக அழகான உங்களின் முதல் குறிப்புக்கு நன்றி.. தொடர்ந்து குறிப்புகள் தரவும். thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

  நன்றி

  ஃபாயிஷாகாதர்

 3. திண்டுக்கல் தனபாலன் Says:

  படமும் விளக்கமும்… செய்து விடலாம் என்னும் நினைப்பு வருகிறது… செய்து பார்ப்போம்…

 4. yasmin Says:

  பீட்ஸா ரொம்ப நல்லா இருக்கு.
  படங்கள் அத்தனையும் ‘பளிச்’சுனு அருமை! வாழ்த்துக்கள்…………

 5. http://mahikitchen.blogspot.com/ Says:

  Chitrakka, naan innum US varala, ooril thaan irukken. 🙂

  Pizza looks yummy with nice pictures!

 6. ஜலீலாகமால் Says:

  பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு

  • chitrasundar5 Says:

   ஜலீலாகமால்,

   சிவப்புவெள்ளை காம்பினேஷனில் பளிச்சுனு தெரியுதுனு நினைக்கிறேன். நீங்களெல்லாம் அழகா இருக்குனு சொன்னதுல ரொம்பவே சந்தோஷம்.உங்க வருகைக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

 7. Dr.M.K.Muruganandan Says:

  நன்றாக இருக்கிறது உங்கள் குறிப்பு
  தயாராகிவிட்டேன்
  சமைக்க அல்ல. சாப்பிட


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: