கீழே படத்திலுள்ள காயை மார்க்கெட்டில் chinese long beans னு எழுதியிருந்தாங்க.காராமணினு நினைக்கிறேன்.பச்சையா,நீளமா இருக்கும் இதை வாங்கி பீன்ஸ் மாதிரியே சாம்பார்,பொரியல்,கூட்டு என சமைத்துவிடுவேன்.நல்லாவே இருக்கும்.வாங்கினா செஞ்சு பாருங்க.
தேவையானவை:
காராமணி_படத்திலுள்ளதில் பாதி
சின்ன வெங்காயம்_3
பச்சைமிளகாய்_1
உப்பு_சிறிது
அரைக்க:
தேங்காய்_இரண்டுமூன்று கீற்றுகள்
சீரகம்_கொஞ்சம்
தாளிக்க:
எண்ணெய்,கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,காய்ந்தமிளகாய்_1,பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
காராமணியை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான அளவில் நறுக்கவும். வெங்காயம்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்.தேங்காய்,சீரகத்தைக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயம்&பச்சைமிளகாய்,அடுத்து காராமணியை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு,சிறிது உப்பு தூவி,காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
காய் வெந்து தண்ணீர் வற்றிய பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்சீரகத்தைச் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.
இது எல்லா சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
6:26 முப இல் செப்ரெம்பர் 25, 2012
எப்போதாவது ஒருமுறை வீட்டில் செய்வதுண்டு…
பகிர்வுக்கு நன்றி அம்மா…
11:36 முப இல் செப்ரெம்பர் 25, 2012
திண்டுக்கல் தனபாலன்,
உங்க ஊரில் இந்தக்காய் கிடைக்குமா!இங்குதான் முதலில் பார்த்தேன். வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.
என்ன திடீர்னு இவ்ளோ பெரிய பதவி உயர்வெல்லாம் கொடுத்திட்டீங்க. பெயரைச்சொல்லியே எழுதலாமே.