இந்த வடையை முருங்கைக்கீரை வடை மாதிரியேதான் செய்தேன்.நன்றாகவே இருந்தது.கிடைத்தால் செய்து பார்க்கலாமே.
சோம்புக் கீரையில் ஒருவித வாசனை வரும் என்று கேள்விப்பட்டதால் இதுவரை வாங்காமலே இருந்தேன். காமாட்சிமா சமைத்ததாலும், ரஞ்ஜனி அவர்கள் ‘எங்க ஊர் கீரை’என்று சொன்னதாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாங்கிவந்து என்ன செய்வது எனத்தெரியாமல் முதலில் கீரை வடை செய்யலாம்,நன்றாக இருந்தால் அடுத்த தடவை இதைவைத்து வேறு ஏதேனும் செய்யலாம் என முடிவெடுத்து வடை செய்தாச்சு.
வடையைப் பார்ப்பதற்கே அழகாக இருந்தது.சுவையும் அருமையாக இருந்தது.பிடிக்காத எந்த வாசனையும் வரவில்லை.
மகி அறிவது: இனி ஹைக்கிங் போகும்போது மறக்காமல் இந்தக்கீரையைப் பறித்துவந்து தூக்கிப் போடாமல் எங்க வீட்டில் கொடுத்துவிட்டுப் போகவும்.
தேவையானவை:
கடலைப்பருப்பு_ஒரு கப்
வறுத்துப்பொடித்த ரோல்டு ஓட்ஸ் மாவு_ஒரு கப்
சோம்புக்கீரை_ஒரு செடியிலுள்ளது
சின்ன வெங்காயம்_சுமார் 10
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_2
பெருஞ்சீரகம்_சிறிது
பூண்டுப்பல்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
தண்டிலிருந்து கீரையைத் தனியாகப் பிரித்தெடுத்து தண்ணீரில் அலசி வைக்கவும்.பார்ப்பதற்கு சவுக்கு இலைகள் போலவே இருக்கிறது.தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கீழேயுள்ள பல்பை வைத்து என்ன சமைக்கலாம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
கடலைப் பருப்பை ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அதனுடன் மிளகாய், பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக,கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம்,கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.
இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான சோம்புக்கீரை வடைகள் தயார்.தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
எங்க வீட்டில் வடையைவிட வடைமாவை உதிர்த்துப் போடுவதற்குத்தான் மவுசு அதிகம்.அவ்வாறு போட்டதுதான் கீழேயுள்ள படத்திலிருப்பது.
9:39 முப இல் செப்ரெம்பர் 28, 2012
மிக்க நன்றி அம்மா… வித்தியாசமாக உள்ளது…
6:59 பிப இல் செப்ரெம்பர் 28, 2012
வருகைக்கு நன்றிங்க.
9:56 பிப இல் செப்ரெம்பர் 29, 2012
வடைகள் ரொம்பவே ககரஎன்று ருசியாகவும், அழகாகவும் இருக்கு. உதிர்த்து போட்டது தூள் பக்கோடா ரகம். அருமையாக இருக்கு.
7:42 முப இல் ஒக்ரோபர் 1, 2012
காமாட்சிமா,
ஆமாம் அம்மா,ருசியுடன் கொஞ்சம் மினுமினுப்பாகவும் இருந்தது.
“உதிர்த்து போட்டது தூள் பக்கோடா ரகம்”_அப்படியா!முதலில் காலியானது இதுதான்.நேரமின்மைக்கு நடுவில் வந்தது மகிழ்ச்சி அம்மா.அன்புடன் சித்ரா.
3:30 முப இல் செப்ரெம்பர் 30, 2012
அன்புள்ள சித்ரா,
நீங்களும் எங்க ஊரு கீரையை வைத்து வடை, தூள் பக்கோடா பண்ணி தூள் கிளப்பிட்டீங்களா? நன்று, நன்று!
நீங்கள் ஒரு முறை அடை செய்வது பற்றி எழுதி இருந்தீர்கள். அதில் கூட இந்தக் கீரையைப் போடலாம். என் பெண் அரிசி ரொட்டி, ராகி ரொட்டி செய்யுபோது இந்த கீரையை பொடிப்பொடியாக நறுக்கி போட்டுச் செய்வாள். இதன் வாசனை பிடித்துவிட்டால் நிறைய பலகாரங்கள் செய்யலாம்.
இதன் பெயரை காமாட்சி அம்மாவிண குறிப்பில் தப்பாக எழுதி விட்டேன். சப்சிகே (Sapsige) சொப்பு என்பார்கள் இதை.
8:26 முப இல் ஒக்ரோபர் 1, 2012
ரஞ்ஜனி,
கொஞ்சம் தயக்கத்துடன்தான் செய்தேன்.ஆனால் நன்றாக இருந்தது.
“என் பெண் அரிசி ரொட்டி, ராகி ரொட்டி செய்யுபோது இந்த கீரையை பொடிப்பொடியாக நறுக்கி போட்டுச் செய்வாள்.இதன் வாசனை பிடித்துவிட்டால் நிறைய பலகாரங்கள் செய்யலாம்”_இனி அடிக்கடி வாங்கி சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
மேலும் கீழேயுள்ள பல்பை வைத்து ஏதேனும் செய்வாங்களானு கேட்டுப்பாருங்க.நன்றி.
1:03 பிப இல் ஒக்ரோபர் 18, 2012
மகி அறிவது: இனி ஹைக்கிங் போகும்போது மறக்காமல் இந்தக்கீரையைப் பறித்துவந்து தூக்கிப் போடாமல் எங்க வீட்டில் கொடுத்துவிட்டுப் போகவும்./////// haha! 🙂 okie..!
I was lil reluctant to cook this keerai because of the strong fennel flavor n wasted it Chitra Akka..next time I will definitely try it.
“Uthirtha vadai” looks super delicious! 😛
8:22 முப இல் ஒக்ரோபர் 20, 2012
கீரையைத் தண்டிலிருந்து பிரிக்கும்போதே&பிறகு நீண்ட நேரமாகியும் கையில் ஒரு வாஸனை வந்துட்டே இருந்துச்சு.ஆனால் வடையில் ஒன்றும் தெரியவில்லை.கிடைத்தால் கொஞ்சமா சேர்த்து செஞ்சு பாருங்க.
$1:50 (கீரை விலை) போய்ட்டு போலாமா?அல்லது நான்கைந்து $$$+செய்யும் நேரம் போய்ட்டு போவுதுன்னு விட்டுடலாமானு யோசிச்சு,கடைசியில் இரண்டாவதை செலக்ட் பன்னினேன்.வடை ஒருவித பளபளப்புடன்,நல்லாவே இருந்துச்சு.நன்றி மகி.
“Uthirtha vadai” looks super delicious!”__ “எங்க வீட்டில் வடையைவிட வடைமாவை உதிர்த்துப் போடுவதற்குத்தான் மவுசு அதிகம்”___ஃபோட்டோவுக்குத்தான் வடையெல்லாம்.இப்படி உதிர்த்து போட்டால்தான் இவங்களுக்குப் பிடிக்குது.