குவாக்கமோலி / Guacamole

guacamole

இந்த டிப் செய்ய அவகாடோ முக்கியம்.அதனுடன் சேர்க்கும் மற்ற பொருள்கள் எல்லாம் நம் விருப்பமே.

சில கடைகளில் Guacamole kit என்றே கிடைக்கிறது.அந்த box ல்  அவகாடோ, எலுமிச்சை,வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளி இவற்றில் ஒவ்வொன்றும், பூண்டிதழ் இரண்டும் உள்ளன‌.இதை வாங்கிக்கூட செய்துகொள்ளலாம்.

தேவையானவை:

அவகாடோ_1
வெங்காயம்_சிறு துண்டு (பெரிய வெங்காயம் எனில் 1/4 பாகம் சேர்க்கலாம்)
தக்காளி_1/4 பாகம்
இனிப்பு மிளகாய்கள்_ஒவ்வொன்றிலிருந்தும் சிறுசிறு துண்டு (பொதுவாக பச்சை மிளகாய் சேர்ப்பாங்க.1.காரத்துக்கு பயந்து, 2.கலர்ஃபுல்லாக இருக்கட்டுமே என்று இனிப்பு மிளகாய்களை சேர்த்திருக்கிறேன்)
கொத்துமல்லி தழை_கொஞ்சம்
வெங்காயத்தாள்_கொஞ்சம்
எலுமிச்சை_ஒரு மூடி
உப்பு_துளியளவு

செய்முறை:

vegetables

வெங்காயம்,தக்காளி,மிளகாய்,கொத்துமல்லி,வெங்காயத்தாள்,இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

avocado

அவகாடோவை இரண்டாக நறுக்கி அதிலுள்ள கொட்டையை நீக்கிவிட்டு சதைப்பகுதியை ஒரு பௌளில் போட்டு,சிறிது எலுமிச்சை சாறுவிட்டு (கருக்காமலிருக்க) ரொம்பவும் நைஸாக இல்லாமல் ஒன்றும்பாதியுமாக‌ பிசைந்துகொள்ளவும்.

பிறகு பொடியாக நறுக்கிய‌வைகளை இதனுடன் சேர்த்து,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலந்து ஒரு 10 நிமிடங்கள் மூடி வைத்து பிறகு உபயோகிக்கலாம்.

guacamole

இப்போது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட குவாக்கமோலி தயார்.சிப்ஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை,அப்படியேகூட சாப்பிடலாம்.

guacamole

அவகாடோவின் கொட்டையையும்,தோலையும்(பௌல் மாதிரி இருக்கும்) எடுத்து வைத்து குவாக்கமோலி தயாரானபிறகு படத்தில் உள்ளதுபோல் வைத்துக்கொடுத்தால் பார்க்க அழகாக இருக்கும்.

6 பதில்கள் to “குவாக்கமோலி / Guacamole”

  1. rajalakshmiparamasivam Says:

    பார்க்கவே சுவையாக இருக்கிறது.
    இதை செய்து பார்த்திட வேண்டியது தான். எல்லாமே இங்கு கிடைக்கும் சித்ரா.
    நன்ரஈ பகிர்விற்கு. சித்ரா/

    • chitrasundar5 Says:

      அவகாடோ கிடைக்கும்போது செய்து பார்த்திடலாம்தான்.பிடித்தால் தொடரலாம்.

      ஆனாலும் எனக்கு இந்தப் பழத்தை அப்படியே அல்லது சர்க்கரையில் லேஸாக புரட்டி சாப்பிட ரொம்ப‌ப் பிடிக்கும்.சிறிது சர்க்கரை சேர்த்து மஸித்து ஒரு 2 நிமி கழித்து சாப்பிட்டு பாருங்க.சூப்பரா இருக்கும்.

  2. மகிஅருண் Says:

    நான் கொஞ்சம் வேறுமாதிரி செய்தேன் சித்ராக்கா! ஒரு முறை செய்ததோடு சரி..அதுக்கப்பறம் அவகாடோ வாங்கவேயில்ல. 😉 🙂

    • chitrasundar5 Says:

      ஆமாம் மகி,நானும் பார்த்தேன்.இரண்டு வாரமாக அவகாடோ மார்க்கெட்டுக்கு வரவில்லை. எனவே வெளியில்தான் வாங்கினேன்.

      நான் வாக் போகும் வழியில் மாங்காய் மாதிரி நிறைய காய்த்துத் தொங்குகிறது. விட்டாங்கன்னா பறிச்சு அனுப்பலாம்.என்ன செய்வது!

  3. மகிஅருண் Says:

    chunky-ஆ க்வாக்கமோலி செய்திருக்கீங்க..கலர்ஃபுல்லா நல்லா இருக்கு. எங்க வீட்டிலதான் 3 டப்பா சல்ஸா கிடக்கு. அவ்வ்வ்வ்வ்! 🙂

    • chitrasundar5 Says:

      எங்க வீட்டுக்கும் ஒரு டப்பா வந்தாச்சே!!!

      மார்க்கெட்ல இருந்து கலர்கலரா,குட்டிக்குட்டி மிளகாய்கள் வாங்கி வருவதால் இரண்டுமூன்று வாரமாக எங்க வீட்டில் எல்லாமே (சாப்பாடு) கலர்ஃபுல்தான்.


மகிஅருண் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி