வறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.
முன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.
தேவையானவை :
முருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)
வறுத்த வேர்கடலை _ ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் _ 1
உப்பு _ ருசிக்கு
செய்முறை :
வேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.
இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.
பிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.
மெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.
வதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.
எல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.
10:43 பிப இல் பிப்ரவரி 23, 2015
முருங்கைக் கீரை வேர்கடலை போரியல். பார்க்கவே நன்றாக இருக்கிறது. செய்து பார்த்திட வேண்டியது தான்.
3:26 பிப இல் பிப்ரவரி 24, 2015
எளிய செய்முறைதானே, செய்து பாருங்க. எண்ணெய் இல்லாததும்கூட.
12:22 முப இல் பிப்ரவரி 24, 2015
சுண்டின கீரையும்,வேர்க்கடலையும். சுலபமாகவும் ,ருசியாகவும்,ஸத்து குறையாமலும் இருக்கும். ருசிச்சவேண்டும். அன்புடன்
3:31 பிப இல் பிப்ரவரி 24, 2015
காமாக்ஷிமா,
எங்க பாட்டி இப்படித்தான் செய்வாங்க. அப்போ சாப்பிடமாட்டேன். இப்போ செய்து பார்த்து பாட்டியின் நினைவுடன் சாப்பிட ரொம்பவே நல்லாருக்கு. சென்னை வந்தால் செய்து சாப்பிட்டு பாருங்கம்மா. அன்புடன் சித்ரா.
12:22 முப இல் பிப்ரவரி 24, 2015
ருசிக்க வேண்டும்.
3:32 பிப இல் பிப்ரவரி 24, 2015
அதையும் இப்படித்தான் நினைத்து படித்தேன் மா.
4:03 முப இல் பிப்ரவரி 24, 2015
அந்த ப்ளேட்டை அப்படியே இங்கு அனுப்புங்க சித்ரா. பார்க்க ஆசையாக இருக்கு. கிடைத்தால் உடனேயே செய்திடுவேன். நன்றி.
3:39 பிப இல் பிப்ரவரி 24, 2015
ம்… ம் …. எடுத்துக்கோங்க ப்ரியசகி. இவையெல்லாம் முன்பைவிட இப்போது கொஞ்சம் எளிதாவே கிடைக்குது. இன்னும் சில வருடங்களானால் உங்களுக்கும் கிடைக்கலாம். அப்போ கண்டிப்பா செஞ்சு பாருங்க.
8:06 முப இல் பிப்ரவரி 24, 2015
கீரை கிடைக்கும் ஆட்கள் பிரட்டலாம்…துவட்டலாம்!! நாங்க என்ன செய்ய?? ஹ்ம்ம்ம்….பேசாமப் படம் பார்க்கலாம்! ஹி..ஹ்ஹி..~
3:50 பிப இல் பிப்ரவரி 24, 2015
ஹா ஹ் ஹா ! இவ்ளோ தூரம் பயணமான கீரை உங்க ஊருக்கு வர எவ்ளோ நேரமாகும் !! வராமலா போய்டும்? அன்றைக்கு போட்டு, புரட்டி எடுத்திட வேண்டியதுதான்.