பொட்டுக்கடலை மாவு முறுக்கு

 

 

ஒரு 3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக்கி சல்லடையில் போட்டு சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்ளலாம்.பொட்டுக்கடலை மட்டுமே சேர்ப்பதால் முறுக்கு நல்ல வெள்ளைவெளேர் என்று சூப்பராக இருக்கும்.

கண்டிப்பாக முறுக்கில் சேர்க்கும் மாவுகள் மிக நைசாக‌ இருக்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு மொறுமொறுப்பாக‌ இல்லாமல் கடிக்கவே கஷ்டமாக இருக்கும்.

முறுக்கு மாவுடன் உங்கள் விருப்பம்போல் ஓமம்,எள்,பெருங்காயம் மட்டுமல்லாமல் சீரகம்,கறிவேப்பிலை,தனி மிளகாய்த்தூள் என சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

அரிசி மாவு_2 கப்
பொட்டுக்கடலை மாவு_1/2 கப்
ஓமம்_சிறிது
எள்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு தட்டில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து,சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவைப்போட்டு நேராக வாணலிலோ அல்லது ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளைப் பிழிந்து வைத்தோ எடுத்து எண்ணெயில் போடவும்.

ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கியதும்  எடுத்துவிடவும்.

இப்போது கரகர,மொறுமொறு முறுக்குகள் தயார்.செய்வதற்கும் எளிது.நினைத்தவுடன் செய்துவிடலாம்.

 

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 7 Comments »

7 பதில்கள் to “பொட்டுக்கடலை மாவு முறுக்கு”

  1. yasmin Says:

    முறுக்கு சூப்பரோ சூப்பர். எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க.பார்க்கும்போதே சாப்பிடவேன்டும் போல இருக்கு.வாழ்த்துக்கள்…

  2. Mahi Says:

    எங்க வீட்டிலும் இப்படித்தான் எப்பவுமே முறுக்கு செய்வோம்! சூப்பரா இருக்குங்க முறுக்கு! 😛 😛

    நானும் உளுந்து மாவு, கடலைமாவுன்னு வேரியேஷன்லாம் ட்ரை பண்ணுவேன்,ஆனா இந்த முறுக்கு மாதிரி பக்குவம் அந்த முறுக்குகளுக்கு வராது எனக்கு! 😉

    • chitrasundar5 Says:

      மகி,

      எல்லார் வீட்டிலும் இப்படித்தான் செய்வீங்களா!இது ரொம்ப ஈஸியா இருக்கே. மாவு வகைகளை அப்படியே சேர்க்கும்போது பச்சை வாஸனை வரும்.அதனால் வெறும் வாணலில்,மிதமானத் தீயில்,மாவு நன்றாக சூடேறும் வரை வதக்கி சேர்த்துப் பாருங்க.நல்லா வரும்.ஒரு தடவ ட்ரை பன்னுங்க.நன்றி மகி.

  3. chollukireen Says:

    முள் இல்லாத குழலில் செய்யும் இதை தேன் குழல் என்று சொல்லுவோம். நல்ல வெளுப்பாய் அழகாக வந்திருக்கு.
    ருசியும் கரகரவென்று நன்றாகஇருக்கும். தின்கலாம்போல உள்ளது.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      பயறு எதுவும் வறுத்து சேர்க்காமல் பொட்டுக்கடலை மட்டும் சேர்த்ததால் நல்ல வெளுப்பாய் வந்தது.ருஸியாகவும்,கூடவே மொறுமொறுப்பாகவும் சூப்பராக இருந்தது.இந்த முறுக்கு இந்த‌ வார மழைக்கு சாப்பிட நன்றாக இருந்தது.

      நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. முறுக்கு,எள்ளடை போன்ற நொறுக்கேல்லாம் சூப்பராக செய்து தருவேன்.எனக்கும் (வீட்டிலும்) இவையெல்லாம் பிடிக்கும் என்பதால் விரும்பி செய்வேன்.நன்றி அம்மா.
      அன்புடன் சித்ரா.

      • chollukireen Says:

        வரேன் வரேன் கட்டாயம் வரேன்.நீயும்வா.எல்லாம் செய்யலாம். சாப்பிடலாம். மனஸாலாவது எல்லாம் நடக்கும்.
        நொறுக்ஸ், நொறுதீனி, கொறிப்பதற்கு,கரகரா,மொறுமொறு,
        எவ்வளவு அழகான புனைப்பெயர்கள் இந்த தின்பண்டங்களுக்கு.


மறுமொழி இடுக‌