வெங்காய பகோடா

 

வெங்காய பகோடாவை சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் நைஸாக மாவும் வெங்காயமும் சேர்ந்தார்போல் வரும். சேர்ந்தார்போல் வேகும்.

பெரிய வெங்காயத்தில் செய்யும்போது  இரண்டுமே கொஞ்சம் பிரிந்து தனித்தனியாக வரும்.அதுவுமில்லாமல் மாவு வெந்து  வெங்காயம் வேகாமல் இருக்கும்.

இங்கு சமயங்களில் சின்ன வெங்காயமே பெரிய வெங்காயம் சைஸில் கிடைக்கும்.விலைதான் கட்டுப்படியாகாது.

 

 

தேவையானவை:

சின்ன வெங்காயம்_3
கடலை மாவு_ஒரு கப்
அரிசி மாவு_ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறு துண்டு
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:

வெங்காயம்,ப.மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீளவாக்கில் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து லேஸாக பிசறினாற்போல் வைக்கவும்.

கடலை மாவு,அரிசி மாவு,சமையல் சோடா,சிறிது உப்பு இவற்றை இரண்டு முறை சலித்து வைக்கவும்.இதில் பெருங்காயம் சேர்க்கவும்.

ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் காயவைத்து மாவில் ஊற்றி மாவு முழுவதும் படுமாறு கிளறவும்.

பிறகு மாவைக் கொஞ்சம்கொஞ்சமாக வெங்காயக்கலவையில் தூவினாற்போல் போட்டு அழுத்தி பிசையாமல் பக்குவமாகப் பிசையவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றவும்.அது காய்வதற்குள் மாவை உதிர்த்தாற்போல் செய்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் மாவைக் கிள்ளி எடுக்காமல்,அழுத்தாமல் அப்படியே உதிரியாக எடுத்துப் போடவும்.

ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் திருப்பிவிட்டு அடுத்த பக்கமும் லேசாக சிவக்கும்போதே எடுத்துவிடும்.ரொம்ப சிவந்தால் சுவையில் கசப்பு தெரியும்.

இறுதியாக கொஞ்சம் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.

இப்போது கமகம,கரகர,மொறுமொறு பகோடா கொறிக்கத் தயார்.

 

 

அப்படியேவோ அல்லது கெட்சப்புடனோ அல்லது தேங்காய் சட்னியுடனோ சாப்பிடலாம்.

பகோடா டிபன்,சாதம் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

9 பதில்கள் to “வெங்காய பகோடா”

  1. Mahi Says:

    /சின்ன வெங்காயமே பெரிய வெங்காயம் சைஸில் கிடைக்கும்./ shallots-ஐதானே சொல்றீங்க? நான் இன்னும் அது வாங்கியதே இல்லை..pearl onion – ரெட், யெல்லோ, ஒய்ட் என்று மூணு கலரும் வாங்கிருக்கேன்.

    பெரிய வெங்காயத்தில்( Red Onion) பகோடா நல்லா வருமேங்க..நான் எப்பவுமே அந்த வெங்காயத்தில்தான் செய்வது. உங்க மெதட் கொஞ்சம் வேற மாதிரி இருக்குது..அதனால என்ன, அடுத்த முறை ஒரு புது ஸ்டைல்ல செய்து சாப்புடுவோமில்ல? 😉 நெக்ஸ்ட் டைம் ஷாலட்ஸ் வாங்கி செய்து பார்க்கிறேன்! 🙂

    • chitrasundar5 Says:

      மகி,

      shallots ஐத் தான் சொல்றேன்.அதிலேயே பெரியதும்,சிறியதுமாகக் கிடைக்கிறது.உங்களுக்கு கிடைத்தால் வாங்கி எல்லாவற்றிலும் சேர்த்துப்பாருங்க. கொஞ்சமாக சேர்த்தாலே நல்ல வாசமாக இருக்கும்.

      நீங்க சொல்லும் pearl onion பெரிய வெங்காயத்தின் பேபி வெங்காயம் என நினைக்கிறேன்.எனக்கும் அது கிடைக்கிறது. நான் வாங்கியதில்லை.பெரிய வெங்காயமேகூட farmers market ல்தான் வாங்குவேன்.புதிதாக ஜூஸியாக இருக்கும்.

      விரும்பினால் கொஞ்சமா செஞ்சி பாருங்க.கண்டிப்பாக வித்தியாசம் தெரியும்.

  2. chollukireen Says:

    ரொம்பவே அழகா இருக்கு பகோடா. கொஞ்சம் புதினாவும், ஸோம்பு சேர்த்து செய்வேன்நான்.கரகரமொருமொரு எல்லாருக்கும்
    பிடித்த வஸ்து

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      அடுத்த தடவ செய்யும்போது புதினாவும்,சோம்பும் சேர்த்து செய்கிறேன். வந்த புதிதில் கடையில் வாங்கிப் பார்த்துவிட்டுத்தான் வீட்டிலேயே செய்ய ஆரம்பித்தேன். அதன் வாசனையாலேயே எல்லோருக்கும் பிடித்துப் போகிறது.
      அன்புடன் சித்ரா.

  3. chollukireen Says:

    2தரம் எழுதி போஸ்ட் ஆகலே. என்ன காரணம் தெறியலே. பல ஸமயம் இப்படிதான் கைகொடுக்கிறது. குட்டியா எழுதினேன். போஸ்ட் ஆகிவிட்டது.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      நானும் இது பற்றி உங்களுக்கு மெயில்கூட அனுப்பியிருந்தேன்.பலமுறை முயற்சித்தும் உங்க ப்ளாக்கிற்கு என்னால் பின்னூட்டம் கொடுக்கவே முடியவில்லை.ஏன்னு தெரியல.அன்புடன் சித்ரா.

  4. yasmin Says:

    இப்படி குறிப்பா அள்ளி தள்ளறீங்க, மேலும் பல குறிப்புகள் எழுத வாழ்த்துக்கள்…,

    • chitrasundar5 Says:

      யாஸ்மின்,

      அது ஒன்னுமில்லிங்க.செய்ததும் எழுதிட்டனா போஸ்ட் பன்னிடுவேன். இல்லைன்னா கிடப்பில் போட்டுடுவேன்.வருகைக்கு நன்றிங்க.

  5. சித்ராசுந்தர் Says:

    ரஞ்சனிநாராயனன்,

    வாங்க!உங்களின் முதல் வருகைக்கும்,பிடித்திருக்கிறது என்றதற்கும் நன்றி.


மறுமொழி இடுக‌