தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2கப்புகள்
உப்பு -1 சிட்டிகை
தேங்காய்- 1/2 மூடி
பால் – 1 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய் – 1
செய்முறை:
பச்சரிசியை சுமார் 2 மணி நேரத்திற்கு ஊறவைத்து வடிகட்ட வேண்டும். பிறகு சிறிது ஈரப்பதத்துடனே மிக்சியில் பொட்டு ஈர மாவாக இடித்துக் கொள்ளவும். பின் இட்லி பானையை அடுப்பில் ஏற்றி ஒரு இட்லி கொத்தில் துணியைப் போட்டு மாவை நன்றாக அவிக்கவேண்டும். மூடியைத்திறந்து மாவை கைகளால் தொட்டால் ஒட்டக் கூடாது. அந்தப் பதத்தில் மாவை இறக்கி உதிர்த்து ஆற வைக்க வேண்டும்.ஆறியதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இளஞ் சூடான தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். மீண்டும் இட்லி பானையை அடுப்பில் ஏற்றிவிட்டு ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு சிறிது மாவை இடியாப்ப அச்சில் போட்டு தட்டு முழுவதும் பிழிந்து விட வேண்டும். பின் அதை இட்லிப் பானையில் வைது வேக விட வேண்டும். ஆவி வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி தேங்காய்ப்பாலை விட்டு சாப்பிட சுவையோ சுவை. இல்லை எனில் காய்கறி குருமா அல்லது கோழி குருமா சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய்ப் பால் செய்முறை:
பாலைக் காய்ச்சவும்.தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து முதல் பால் பிழிந்து எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை அறைத்து இரண்டாம் பாலையும் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். இதை பாலுடன் கலந்து சர்க்கரை,பொடித்த எலக்காய் சேர்த்து கலக்கவும்.
குறிப்பு:
மாவை பிசைந்த பிறகு கைகளால் தொட்டால் ஒட்டக் கூடாது. ஒட்டினால் மாவு நன்றாக வேகவில்லை என்று அர்த்தம்.எனவே மாவில் சிறிது நீர் தெளித்து மைக்ரோ அவனில் ஓரிரு மணித்துளிகள் வைத்து எடுக்கவும்.
11:43 பிப இல் ஏப்ரல் 9, 2012
இடியாப்பம் இதே செய்முறையில் செய்து பார்த்தேன். அவ்வளவு அருமையாக வந்தது. உடனே தீர்ந்து விட்டது. ரொம்ப ருசியாக இருந்தது. வாழ்த்துக்கள்
10:55 முப இல் ஏப்ரல் 10, 2012
செய்துபார்த்து பின்னூட்டமும் அளித்தது மகிழ்ச்சி.நன்றாக வந்ததில் இன்னும் சந்தோஷம்.அடுத்தடுத்து செய்யும்போது மிகச்சுலபமாகிவிடும்.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.