நம்ம ஊர்ல இப்போது ஒட்டு மாங்காய் பிஞ்சுகள் நிறைய கிடைக்கும். அவற்றை அப்படியே சாப்பிட சிறிது துவர்ப்புடன் சூப்பரா இருக்கும்.அதையே நீளவாக்கில் துண்டுகள் போட்டு கொஞ்சம் காரம் சேர்த்து சாப்பிட இன்னும் சூப்பரா இருக்கும்.
இங்கே அவை கிடைக்காது என்பதால் ஒரு பெரிய மாங்காவை வைத்து செய்திருக்கிறேன்.செய்துபார்த்து நன்றாக இருந்தால் ஒரு பை நிறைய ஒட்டு மாங்காய் பிஞ்சுகளை வாங்கி என்னுடைய ப்ளாக் அட்ரஸுக்கு அனுப்பி வையுங்க. நினைக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.
தேவையானவை:
மாங்காய்_1
உப்பு_சிறிது
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
தனி மிளகாய்த்தூள்_ஒன்றிரண்டு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்_துளிக்கும் குறைவாக
வறுத்த வெந்தயப்பொடி_துளிக்கும் குறைவாக
செய்முறை:
மாங்காயைக் கழுவித் துடைத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.மாம்பிஞ்சாக இருந்தால் மெல்லிய துண்டுகளாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு,அந்த சூட்டிலேயே மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,வெந்தயப்பொடி,உப்பு சேர்த்து ஒரு கிளறுகிளறி மாங்காய்த் துண்டுகளையும் சேர்த்துக் கிண்டிவிட்டு சூடாகவோ அல்லது ஆறவைத்தோ கண்ணாடி பாட்டிலில் எல்லாம் எடுத்து வைக்க சொல்லமாட்டேன்,அதில் ஒரு டூத்பிக் வைத்துக் கொடுத்துவிட்டால் போதும்,உடனே காலிபண்ணி விடுவார்கள்.
வேண்டுமானால் நிறைய செய்து வைத்துக்கொண்டு சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.
2:07 பிப இல் பிப்ரவரி 27, 2013
என்னவருக்கு மிகப் பிடித்த ஐட்டம்! 🙂 ஊரில் இப்படி உப்பு-மிளகாப்பொடி போட்டு சுவைத்திருக்கேன், ஆனா இந்த ஊர் மாங்காய்கள் ஏனோ பிடிக்கலை சித்ராக்கா! ஒரு முறை இண்டியன் கடையில் அநியாய விலை கொடுத்து ஒரு மாங்கா வாங்கிவந்து வீணாக்கிவிட்டேன். அவ்வ்வ்வ்! அதிலிருந்து மாங்காய் பக்கம் தலை வைச்சே படுக்கறதில்லை. ஸம்மர்ல சைனீஸ் மார்க்கட் போய் மாம்பழம் மட்டும் வாங்குவோம்.
படங்கள் தெளிவாக இருக்கு. நல்ல ரெசிப்பி!
//கண்ணாடி பாட்டிலில் எல்லாம் எடுத்து வைக்க சொல்லமாட்டேன்,அதில் ஒரு டூத்பிக் வைத்துக் கொடுத்துவிட்டால் போதும்,உடனே காலிபண்ணி விடுவார்கள்.//ஹஹாஹ! அப்ப நீங்க காலி பண்ணுவதில் பங்கெடுத்துக்கறதில்லையோ? 😉
4:32 பிப இல் பிப்ரவரி 27, 2013
எங்க வீட்டிலும் அப்படியே!இவர்தான் செலக்ட் பண்ணுவார்.புதுசா,நல்லா கல்லு மாதிரி இருக்கறதா எடுப்பார்.எனக்கு இதெல்லாம் தெரியாது.ஆனால் நம்ம ஊர் மாதிரி வராதுதான்.என்ன செய்வது.
சம்மரில் சதர்ன் கலிஃபோர்னியாவிலிருந்து வந்து ஃபார்மர்ஸ்மார்க்கெட்டில் ஒரு திடீர்கடை வரும்.மாங்காய்,மாம்பழம்,வாழைப்பழம்,பலா இன்னும் பெயர் தெரியாத பழங்கள் எல்லாம் எடுத்து வருவாங்க.விலைதான் அதிகம். ஆனால் சூப்பரா இருக்கும்.
செய்யும்போதே உப்பு இருக்கா,காரம் போதுமா,எல்லாம் சேர்ந்து எப்படி இருக்கு,இப்படி எல்லாம் பார்த்துபார்த்து பாதி காலி பண்ணுவதே நான்தான். டூத்பிக் வைத்த பிறகும் பங்கு போட்டால்…?
9:53 பிப இல் பிப்ரவரி 27, 2013
இன்னும் ஒட்டு மாங்காய் பிஞ்சுகள் இந்தியாவிலும் மார்கெட் பக்கம் தலை காட்டவில்லை.
வந்தவுடன் உங்கள் ப்ளாக் அட்ரசிற்கு மறக்காமல் அனுப்பிவிடுகிறேன்.
உங்கள் கார மாங்காய் எனக்கும் நாவில் எச்சி ஊறுகிறது .
பகிர்விற்கு நன்றி.
11:03 முப இல் பிப்ரவரி 28, 2013
இன்னும் கொஞ்ச நாளில் மார்க்கெட் பக்கம் தலைகாட்டும் என்று நினைக்கும்போதே கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்க்கிறது.வருகைக்கும், அனுப்பிவைப்பதற்கும் நன்றிங்க.
10:32 பிப இல் பிப்ரவரி 27, 2013
இப்போது தான் மாங்காய் வரத்து ஆரம்பித்துள்ளது…
நன்றி…
11:20 முப இல் பிப்ரவரி 28, 2013
“இப்போது தான் மாங்காய் வரத்து ஆரம்பித்துள்ளது…”___ம்ம்,எஞ்ஜாய் பண்ணுங்க.வருகைக்கு நன்றிங்க.
5:07 பிப இல் பிப்ரவரி 28, 2013
சௌ-சௌ படம் பாத்தீங்களா? 🙂 இந்த காய்க்கு நீங்க என்ன பேர் சொல்வீங்க?
5:11 பிப இல் பிப்ரவரி 28, 2013
‘சௌ சௌ’னுதான் சொல்லுவோம்.சிலர் ‘பெங்களூர் கத்தரிக்காய்’னு சொல்லுவாங்க.
5:18 பிப இல் பிப்ரவரி 28, 2013
“சௌ-சௌ படம் பாத்தீங்களா?”____முதலில் எனக்குப் புரியல.இப்போதான் பதிவைப் போய்ப் பார்த்தேன்.சௌ சௌ தான் மேரக்காயா!நல்ல பிள்ளையா விளக்கமெல்லாம் வேறு சொல்லிட்டேன்.