நான் எப்போதாவது flour tortillas/ ஃப்ளோர் டார்டியாஸ் வாங்குவேன்.இது சாஃப்ட் சப்பாத்தி மாதிரி இருக்கும்.லத்தீன் அமெரிக்கன் ப்ரெட்.அவர்கள் இதை வைத்து பலவிதமான உணவுகளைத் தயார் செய்வர்.அதில் ஒன்றுதான் இந்த சிப்ஸ். இங்கு L ஐ சைலண்டாக உச்சரிக்க வெண்டும் என்பதால் tohr/tee/yahs என்றே சொல்ல வேண்டும்.ஒருமையில் Tortilla, பன்மையில் Tortillas.
இதை வீட்டில் யாருக்கும் பிடிக்காது.போட்டி போட்டு சாப்பிட ஆள் இருந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து காலி செய்யலாம்.அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதால் குறைந்த எண்ணிக்கை உள்ள பாக்கெட்டாக வாங்கி (நான் மட்டும்) சாப்பிட்டது போக மீதியை Bake/பேக் செய்து சிப்ஸாக்கிடுவேன்.மகளும் நானும் விரும்பி சாப்பிடுவோம்.தொட்டு சாப்பிட சல்ஸா இருந்தால் நன்றாக இருக்கும்.
நீண்ட நாட்களாக சிப்ஸ் பக்கமே போவதில்லை என்பதால் சல்ஸாவும் கைவசமில்லை.அதனால் எளிதாக செய்யக்கூடிய குவாக்கமோலி/அவகாடோ டிப் செய்தேன்.இந்தப் பதிவில் டார்டியா சிப்ஸ் செய்வதைப் பற்றி மட்டும் பார்த்துவிட்டு அடுத்த பதிவில் டிப் செய்வதைப்பற்றி பார்க்கலாம்.
தேவையானப் பொருள்கள்:
ஃப்ளோர் டார்டியாஸ்_3 அல்லது உங்கள் விருப்பம்போல்
பட்டர்/Butter_சிறிது
மிளகுத்தூள்_சிறிது
உப்புத்தூள்_சிறிது
செய்முறை:
ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
தேவையான டார்டியாஸை எடுத்து அதன் மேல் முழுவதும் படுமாறு பட்டரை தேய்த்து விடவும்.பின் அவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி,
மேலே படத்திலுள்ளதுபோல் ஒரு கத்தியால் முதலில் அரை வட்டம்,அடுத்து கால் வட்டம் இப்படியாக சிறுசிறு முக்கோணங்களாக வருவதுபோல் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு cookie sheet /குக்கி ஷீட்டை எடுத்து அதில் அலுமினம் ஃபாயில் போட்டு அதன்மீது நறுக்கி வைத்துள்ள டார்டியாஸ் துண்டுகளை அடுக்கிவைத்து அவற்றின் மேல் மிளகுத்தூள் & உப்புத்தூளை லேஸாகத் தூவி விடவும்.
வெட்டிய துண்டுகள் மீதமிருக்குமானால் அதன் மேலேயே இன்னொரு அடுக்காகவும் வைத்து அதன்மீதும் மிளகுத்தூள் & உப்புத்தூளை மீண்டும் தூவவும்.
அந்த ட்ரேயை முற்சூடு செய்யப்பட்டுள்ள அவனில் சுமார் 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு அல்லது லேஸாக ப்ரௌன் நிறம் வரும்வரை bake/பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.
இப்போது கரகரப்பான,மொறுமொறுப்பான டார்டியா சிப்ஸ் தயார்.இதனை ‘சல்ஸா’வுடனோ அல்லது ‘அவகாடோ டிப்’புடனோ சாப்பிட சூப்பராக இருக்கும்.
அடுத்த பதிவில் அவகாடோ டிப் செய்முறையைப் பார்க்கலாம்.
7:17 முப இல் ஏப்ரல் 25, 2013
புதிதாக இருக்கிறது… அழகாகவும் இருக்கிறது…!
2:16 பிப இல் ஏப்ரல் 25, 2013
நம்ம ஊர் சப்பாத்தி மாதிரியானதுதான்.அதை அப்படியே சிப்ஸாக்கியாச்சு.
3:04 பிப இல் ஏப்ரல் 25, 2013
Guilt free chips! We just finished the chips from farmers market. Hubby bought 3 types of salsa’s Chitra Akka..do send some chips here. 😉 🙂
5:10 பிப இல் ஏப்ரல் 25, 2013
சல்ஸாவை அனுப்புவீங்கன்னு பார்த்தால் இப்படி சொல்லிட்டீங்களே.நேத்தைக்கு இந்நேரம் கேட்டிருந்தால் அனுப்பியிருப்பேன்.அடுத்த தடவ கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்.
இங்கு ஒன்னு வாங்கினாலே தீர மாட்டிங்கிது.மூனு வாங்கியிருக்கீங்களா!!!…
2:26 பிப இல் ஏப்ரல் 26, 2013
/சல்ஸாவை அனுப்புவீங்கன்னு பார்த்தால் இப்படி சொல்லிட்டீங்களே./ ஹஹ்ஹாஹா! 🙂 நாங்க வாங்கிட்டு குடுக்கறதுதான் வழக்கம் சித்ராக்கா! ஹிஹி! 😉 நீங்க சிப்ஸ் அனுப்பற பாக்ஸ்லயே உங்க முகவரி ஸ்லிப்பையும் வச்சி அனுப்புங்கோ. அதே பெட்டில சல்ஸா அனுப்பிர்ரேன்! 😉 🙂
//சல்ஸாவை அனுப்புவீங்கன்னு பார்த்தால் இப்படி சொல்லிட்டீங்களே.// அதையேன் கேக்கறீங்க?! நீங்க //Hubby bought 3 types of salsa’s // இதையப் பார்க்கேல்லயோ? 🙂 என்னவர் எள்ளுன்னா எண்ணெயா நிப்பார். நாம ஆப்பிள் வாங்கிட்டு வர சொன்னா, மார்க்கட் பூரா சுத்திட்டு கிடைச்சதை எல்லாம் அள்ளிட்டு;) வருவார். அவ்வ்வ்வ்வ்! 3 சல்ஸா-ல ஒண்ணுதான் ஜூப்பர் காரம்..ஹாலப்பினோவும் வேற எதோ மிக்ஸ்! மத்த ரெண்டும் ஒரே சீஸி அண்ட் க்ரீமி!! 😐
எதுக்குடா பதில் சொன்னோம்னு யோசிப்பீங்களே,அது…அது…அதுதான் எனக்கு வேணும்! 😉
4:20 பிப இல் ஏப்ரல் 26, 2013
நீங்க கூடப் போனாதான் இதையெல்லாம் (அவருக்கு பிடிச்சதை) வாங்க விடமாட்டீங்க.இப்படி இல்லாத சமயமா பாத்து வாங்கினாதான் உண்டுன்னு வாங்கியிருப்பார்.
நீங்க //Hubby bought 3 types of salsa’s // இதையப் பார்க்கேல்லயோ? ___ பிடிச்சுதான் 3 டைப்பையும் வாங்கினீங்களோன்னு நெனச்சிட்டேன்.
“நீங்க சிப்ஸ் அனுப்பற பாக்ஸ்லயே உங்க முகவரி ஸ்லிப்பையும் வச்சி அனுப்புங்கோ.அதே பெட்டில சல்ஸா அனுப்பிர்ரேன்!”________நாங்களும் உஷாராயிட்டோம்ல.இதோ,சல்ஸா ரெஸிபிக்கான குறிப்பு ரெடி.
12:15 முப இல் ஏப்ரல் 27, 2013
சித்ரா,
நேற்றே உங்கள் பதிவைப் படித்து விட்டேன். ஆனால் comments closed என்று வந்திருந்தது.
அதான் லேட் கருத்துரை.
உங்கள் tortillas பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது.
ஆனால் எங்களுக்கு இதெல்லாம் இங்கு கிடைக்குமா தெரியவில்லை.
ஆனால் அவகேடோ கிடைக்கும் சல்ச ரெசிபி செய்து விடுகிறேன்.
நன்றி சித்ரா
4:49 பிப இல் ஏப்ரல் 27, 2013
முதலில் போட்ட பதிவைக் காணோம்,அடுத்து புதிதாகப் போட்டால் பின்னூட்டத்தைக் காணோம்.ஒருவழியாக பிரச்சினை தீர்ந்தது.
இது சப்பாத்தி மாதிரிதான்,கொஞ்சம் சாஃப்டாக இருக்கும்.சென்னையில் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.இல்லாட்டி இருக்கவே இருக்கு சப்பாத்தி,சிப்ஸாக்கிட வேண்டியதுதான்.ஒரு நாளைக்கு இதை ட்ரை பண்ணணும்.
வருகைக்கு நன்றிங்க.
2:28 முப இல் ஏப்ரல் 27, 2013
அட! எனக்குக் கூட ராஜி மாதிரியே ‘comment closed’ அப்படீன்னு வந்தது.
வாயில நுழையாத பேரா எதையோ பண்ணிட்டு – காமென்ட் கேட்டா வேறதாவது கிடைக்கப் போவுதுன்னுட்டு அப்படி போட்டீங்களோன்னு நினைச்சேன்! :):):)
4:31 பிப இல் ஏப்ரல் 27, 2013
சொல்ல வரலைன்னாகூட விடமாட்டோம்.இம்போஸிஷன் எல்லாம் கொடுத்து எப்படியாவது வரவச்சிடுவோம்.
வடிவேலுவின் கிணறு காணாம போனமாதிரி வியாழன் மதியம் போட்ட பதிவை மாலைக்குள் காணோம்.ட்ராஃப்டிலும் ஸேவ் ஆகலை.பிறகு இரவு போஸ்ட் பண்ணினால் பின்னூட்டத்தைக் காணோம்.அடுத்த நாள் காலை மீண்டும் புது பதிவாக்கினேன்.இவ்ளோதாங்க நடந்தது.